தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்டதால் மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே வழக்கு ரத்து - MHC quashes Shobha Karandlaje case - MHC QUASHES SHOBHA KARANDLAJE CASE

Shobha Karandlaje: பெங்களூரு ராமேஸ்வரம் காஃபே குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே மன்னிப்பு கோரியதை அடுத்த அவர் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஷோபா கரந்தலஜே, சென்னை உயர் நீதிமன்றம்
ஷோபா கரந்தலஜே, சென்னை உயர் நீதிமன்றம் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2024, 4:46 PM IST

சென்னை: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழகத்தைச் சேர்ந்த நபர்கள் தான் காரணம் என ஆதாரமின்றி மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக திமுகவைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் அளித்த புகாரின் பேரில், இரு பிரிவினரிடையே கலகலத்தை தூண்டுதல், பொது அமைதியை சீர்குலைத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ஷோபா கரந்தலஜே மீது மதுரையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஷோபா கரந்தலஜே சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, இணையமைச்சர் ஷோபா தரப்பில், பெங்களூரு ராமேஸ்வரம் காஃபே குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரத்தில் மன்னிப்புக் கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், "குண்டு வெடிப்பில் தமிழர்களுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறிய கருத்து எந்த உள்நோக்கத்துடனும், தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் கருத்து தெரிவிக்கவில்லை என கூறப்பட்டது. மேலும், தனது கருத்து தமிழர்களை புண்படுத்தியதை புரிந்து கொண்டு சமூக வலைத்தளங்களில் மன்னிப்பு கோரியதாகவும், தமிழர்களின் வரலாறு, கலாசாரம் மற்றும் பண்பாடு மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளதாகவும், அந்த பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் பி. எஸ்.ராமன், ஷோபா கரந்தலஜே மன்னிப்புக் கோரியதை தமிழக மக்கள் சார்பாக அரசு ஏற்றுக்கொள்வதாக கூறினார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மத்திய இணையமைச்சர் ஷோபா கரந்தலஜே மீது மதுரையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:தமிழர்களிடம் மன்னிப்பு கோரினார் மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே!

ABOUT THE AUTHOR

...view details