சென்னை:சென்னை, ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த கிருபாகரன் என்ற இளைஞரும், மதுரவாயலைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஆகியோர் வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் பகுதியில் உள்ள கால்பந்து ட்ரைனிங் அகாடமியில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி இரவு பயிற்சி முடிந்து அருகே உள்ள உணவகத்தில் உணவு வாங்கச் சென்றுள்ளனர். அப்போது பின்னணி பாடகர் மனோவின் மகன்கள் ஷாகிர் மற்றும் ரஃபிக் ஆகிய இருவரும் தங்களது வீட்டின் முன்பு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்ததாகவும், அந்த வழியாக வந்த கிருபாகரன் மற்றும் 16 வயது சிறுவனிடம், மனோவின் மகன்கள் மற்றும் அவரது நண்பர்கள் மது போதையில் தகராறு செய்து அடித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து, கிருபாகரன் என்ற இளைஞரும், 16 வயது சிறுவனும் மதுபோதையில் தங்களை தாக்கியதாக பின்னணி பாடகர் மனோவின் மகன்கள் சாஹிர், ரஃபீக் மற்றும் அவர்களது நண்பர்கள் தர்மா (23), விக்னேஷ் (28) ஆகிய நான்கு பேர் மீதும் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.