தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கே.டி.ராஜேந்திர பாலாஜி வழக்கில் காவல்துறை பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு! - Ex Minister Rajendra Balaji case - EX MINISTER RAJENDRA BALAJI CASE

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சென்னை உயர் நீதிமன்றம் கோப்புப்படம்
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சென்னை உயர் நீதிமன்றம் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 13, 2024, 7:45 PM IST

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த கே.டி.ராஜேந்திர பாலாஜி மூலம் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, விருதுநகரைச் சேர்ந்த அதிமுக முன்னாள் பிரமுகர் விஜய நல்லதம்பி என்பவர், சாத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவரிடம் ரூ.30 லட்சம் பெற்றுள்ளார்.

ஆனால் உறுதியளித்தபடி வேலை வாங்கிக் கொடுக்காததால், ரவீந்திரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, விஜய நல்லதம்பி உள்ளிட்டோருக்கு எதிராக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கடந்த 2021ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடக் கோரி ரவீந்திரன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க :ஐ.பெரியசாமி மீதான முறைகேடு வழக்கு; குற்றச்சாட்டு பதிவுக்காக விசாரணை ஒத்திவைப்பு! - minister I periyasamy Case

இந்த நிலையில், ராஜேந்திர பாலாஜி முன்னாள் அமைச்சர் என்பதால் அவரது அரசியல் செல்வாக்கு காரணமாக வழக்கில் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை எனவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் வரும் செப்டம்பர் 27ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details