சென்னை: தமிழகம் முழுவதும் கோயில்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்களைப் பாதுகாக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபிக் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, “ஒரே மாதிரியாக அடுத்தடுத்து வழக்குகள் தாக்கல் செய்கிறீர்கள். இந்த வழக்கில் உண்மைத்தன்மை இல்லாவிட்டால் அதிக அபராதம் விதிக்கப்படும் என்றும், தமிழகத்தில் 44 ஆயிரம் கோயில்கள் உள்ளதால் 44 ஆயிரம் வழக்குகள் தாக்கல் செய்வீர்களா?” என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதனையடுத்து, அரசுத் தரப்பில், கோயில் நிலங்களை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுதாரர் தனது மனுவில் கோரியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.