சென்னை:தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் உள்ள காளியம்மன் கோயிலி்ல், கடந்த 2022ஆம் ஆண்டு தேர் திருவிழா நடத்தப்பட்டது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த திருவிழாவின் போது, தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் காயமடைந்த ஆறு பேரில், ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, கோயில் தேர்த் திருவிழாக்களின் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளைப் பின்பற்றாததால் தான் விபத்து நடந்துள்ளதாகவும், அதனால் விதிமுறைகளை பின்பற்றத் தவறிய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும், தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் தேர்த்திருவிழாக்களின் போது, இந்த விதிகளைக் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.