சென்னை:விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் கழிவறைக்குச் சென்ற 4 வயது எல்.கே.ஜி மாணவி லியாலெட்சுமி கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து உயிரிழந்தது தொடர்பாக அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், சந்தேகம் மரணம், பணியில் அஜாக்கிரதையாக இருப்பது ஆகிய பிரிவின் கீழ் காவல்துறையினர் பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டோம்னிக் மேரி, வகுப்பு ஆசிரியர் ஏஞ்சல், ஆகிய மூவர் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனர்.
இதையடுத்து வழக்கில் ஜாமீன் கோரி மூவரும் தாக்கல் செய்த மனுவை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் நேற்று முன்தினம் (ஜனவரி 8) தள்ளுபடி செய்தது. இதையடுத்து மூன்று பேரும் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று (ஜனவரி 10) நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.