சென்னை:தமிழக அரசின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனர் (டி.வி.ஏ.சி) அலுவலகத்தின் ரகசியப் பிரிவில், சிறப்பு உதவியாளராக கடந்த 2008ஆம் ஆண்டு பணியாற்றிய சவுக்கு சங்கர், அங்கு இருந்த சில உரையாடல்களைத் திருடி வெளியிட்டதாக சென்னை சிபிசிஐடி காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், காவல்துறை தரப்பில் தெரிவித்த குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க தவறிவிட்டதால் சங்கரை விடுதலை செய்து கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 24 அன்று தீர்ப்பளித்தது. இந்நிலையில், சென்னை அமர்வு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சிபிசிஐடி காவல்துறை, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்துள்ளது.