திண்டுக்கல்: கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தமிழகத்தையே உலுக்கியது. இதில் கள்ளச்சாராயம் குடித்து சுமார் 65க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கள்ளச்சாராயம் மற்றும் சில்லறை மது விற்பனையை தடுப்பது தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் மதுவிலக்கு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பணத்தை மதுவிலக்கு போலீசார் எடுத்துச் செல்வது தொடர்பான சிசிடிவி காட்சி (Credits - ETV Bharat Tamil Nadu) அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள செங்குறிச்சியில் செயல்பட்டு வரும் பாரில் சோதனை செய்வதற்காக, திண்டுக்கல் மாவட்ட மதுவிலக்கு காவல் உதவி ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் காவலர் ஜேம்ஸ் ஆகியோர் சென்றுள்ளனர்.
அப்போது பாருக்குள் நுழைந்த போலீசார், மது அருந்திக் கொண்டிருந்தவர்களை சோதனை என்ற பெயரில் விரட்டியதாகவும், மேலும் அங்கிருந்த முதியவர் ஒருவர் டவுசர் பையில் வைத்திருந்த 400 ரூபாயை எடுத்து விட்டு, பாரில் விற்பனை செய்து அட்டைப் பெட்டியில் வைத்திருந்த ரூ.40 ஆயிரத்தையும் மதுவிலக்கு காவல் உதவி ஆய்வாளர் முத்துக்குமார் எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. தற்போது இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி கடும் விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: சென்னையில் நூதன முறையில் கார்களில் திருட்டு.. கைவரிசை காட்டும் ராம்ஜி நகர் கொள்ளையர்கள்!