தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை; தரங்கம்பாடி கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்! - THARANGAMBADI BEACH

தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை முடிவதால் ஓசோன் செறிவு மண்டலமான தரங்கம்பாடி கடற்கரைக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து கடலில் குளித்து மகிழ்ந்தனர்.

தரங்கம்பாடி கடற்கரை
தரங்கம்பாடி கடற்கரை (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 3, 2024, 9:39 PM IST

மயிலாடுதுறை: தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை முடிவதால் ஓசோன் செறிவு மண்டலமான தரங்கம்பாடி கடற்கரைக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து கடலில் குளித்து மகிழ்ந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில், புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விதமாக, தரங்கம்பாடி கடற்கரையில் கடந்த 17ஆம் நூற்றாண்டில் அதாவது 1620ஆம் ஆண்டில் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க டேனிஷ் கோட்டை, ஆளுநர் மாளிகை, பழமையான தேவாலயங்கள், 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மாசிலாமணி நாதர் கோயில் ஆகியவை அமைந்துள்ளன. 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த நகரமாக உள்ள தரங்கம்பாடி தான் இந்தியாவில் ஓசோன் காற்று அதிகம் வீசும் கடற்கரை நகரமாக விளங்குகிறது.

தரங்கம்பாடி கடற்கரை (Credits - ETV Bharat Tamil Nadu)

குறிப்பாக ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் இப்பகுதியில் அதிகமாக காற்று வீசுகிறது. இங்குள்ள டேனிஷ் கோட்டையின் கீழ்தளத்தில் கிடங்குகள், வீரர்கள் தங்கும் அறை, மேல்தளத்தில் தொல்லியல் துறையின் பழங்கால பொருட்கள் அடங்கிய அருங்காட்சியகம் உள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க தரங்கம்பாடி கடற்கரை நகரத்திற்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளி மாநில மற்றும் வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம்.

இதையும் படிங்க:தீபாவளி முடிந்து சென்னையை நோக்கி படையெடுக்கும் மக்கள்: போக்குவரத்து நெரிசலில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்!

இந்நிலையில் தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை இன்றுடன் முடிவடைவதால் வழக்கத்தை விட ஏராளமான உள்ளூர் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் தரங்கம்பாடி கடற்கரைக்கு வருகை தந்தனர். டேனிஷ் கோட்டை, அருங்காட்சியகம், ஆளுநர் மாளிகை உள்ளிட்ட பல்வேறு இடங்களை குடும்பதினருடன் சுற்றி பார்த்து கடற்கரை மணலில் அமர்ந்து குடும்பத்தினருடன் விடுமுறையை கொண்டாடி நேரத்தை செலவிட்டனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details