வேலூர்:வேலூர் மாவட்டம் திருவலம் அருகே உள்ள பொன்னை ஆற்றின் குறுக்கே கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் தமிழக அரசின் சார்பில் தடுப்பணை ஒன்று அமைக்கப்பட்டது. இதை நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார். இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக பொன்னை சுற்றுவட்டார கிராமங்களில் பெய்த கனமழையால் பொன்னை ஆற்றுக்கு வரும் நீர் அந்த தடுப்பணையை முழுவதுமாக நிரப்பியுள்ளது.
இதனால் நிலத்தடி நீர் உயரும் எனவும் விவசாய ஆழ்துளை கிணறுகளின் நீர் மட்டமும் உயரும் என குகையநல்லூர், ஸ்ரீபாத நல்லூர், திருவலம், மேல்பாடி முதல் சோளிங்கர் வரையிலான 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயனடைய உள்ளனர். மேலும் இந்த தடுப்பணையில் தேங்கியிருக்கும் நீர் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் இந்த தடுப்பணை குடிநீர் தட்டுபாடு ஏற்படாமல் தவிர்க்கும் எனவும் கிராம மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.