தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் அரங்கை இன்று (புதன்கிழமை) தூத்துக்குடி திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி திறந்து வைத்தார். முன்னதாக, மாற்றுத்திறனாளிகளுக்கான இருசக்கர வாகனம், ஆட்டோ உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.
அதன் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, "தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் குளறுபடிகள் குறித்து பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளைச் சந்தித்து கேட்டறிந்தேன். இது குறித்து முதலமைச்சர் அலுவலகத்திலும் தெரிவித்துள்ளோம்.
நீட் தேர்வில் உள்ள ஒவ்வோரு பிரச்சினைகளைக் கண்டறிந்து அதனை சரி செய்வதை விட, நீட் தேர்வை நிரந்தரமாக நிறுத்த வேண்டும் என்று தான் திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதற்கான முயற்சிகளை முதலமைச்சர் மேற்கொண்டு வருகிறார். தூத்துக்குடியில் நடைபெற்ற நீட் தேர்வு குளறுபடி விவகாரத்தில் மாணவர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.
பின்னர் அவரிடம், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதி குறைவாக மத்திய அரசு வழங்கியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, "மத்திய அரசு மற்ற மாநிலங்களுக்கு அதிகமாக வழங்கி உள்ளது. இது குறித்து துறை அமைச்சரிடமும், பிரதமரிடமும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி கோரிக்கை வைப்போம்.