தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரண்டாவது நாளாக மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டி! - MADURAI JALLIKATTU IN STADIUM

திமுக சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டமாக இன்று (பிப்.12) இரண்டாவது நாளாக மதுரை கலைஞர் நூற்றாண்டு ஜல்லிக்கட்டு அரங்கத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டி
கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டி (MINISTER P. MOORTHY X PAGE)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 12, 2025, 12:19 PM IST

மதுரை:தைப் பொங்கல் காலங்களில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, மதுரையில் பெரும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காண தமிழகம் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் ஏராளமானோர் வருவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த ஆண்டு அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து அந்த அரங்கத்தை திறந்து வைத்த அன்று மட்டுமே அங்கு ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

முதல் நாள்:இந்த நிலையில் திமுக சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியாக பிப்ரவரி 11, 12 மற்றும் 16ஆம் தேதிகளில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், நேற்று (பிப்.11) ஜல்லிக்கட்டு தொடங்கப்பட்டது. முதல் நாளான நேற்று போட்டியை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி காலை 7 மணியளவில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டி (ETV Bharat Tamil Nadu)

இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில், மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட 900 காளைகள், 500 வீரர்கள் பங்கேற்கின்றனர். களத்தில் நின்று விளையாடும் காளையின் உரிமையாளருக்கும், காளைகளைத் தழுவும் வீரர்களுக்கும் தங்க காசு, சைக்கிள், மிக்ஸி உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இதில் மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட மேற்கு, வடக்கு, திருப்பாலை, ஆனையூர் ஆகிய பகுதியைச் சேர்ந்த காளைகள் பங்கேற்கின்றன.

இதையும் படிங்க:'தமிழிசூழ் மாமதுரை' - மதுரையை பாதுகாக்கப்பட்ட தொன்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும்" - கரு பழனியப்பன்

சிறப்பு ஏற்பாடுகள்:கீழக்கரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு காண வரும் பொதுமக்களுக்கு பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு காண மைதானத்திற்கு வரும் பார்வையாளர்களுக்கு அரங்கில் அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்ட நிலையிலும் கூட, ஜல்லிக்கட்டை காண பொதுமக்கள் யாரும் வராமல் பார்வையாளர்கள் கேலரிகள் அனைத்தும் காலியாக வெறிச்சோடி காணப்படுகிறது.

இரண்டாம் நாள்:இந்நிலையில், இரண்டாம் நாளான இன்றைய (பிப்.12) போட்டியை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி காலை 7 மணியளவில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, மாடு பிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில், மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட 900 காளைகள், 500 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

களத்தில் நின்று விளையாடும் காளையின் உரிமையாளருக்கும், காளைகளைத் தழுவும் வீரர்களுக்கும் தங்க காசு, சைக்கிள், மிக்ஸி உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details