தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஐபிஎல் சூப்பர் சண்டே: ஆர்சிபி - கேகேஆர் அணிகள் மற்றும் பிபிகேஎஸ் - ஜிடி அணிகள் இன்று பலப்பரீட்ச்சை - IPL 2024

IPL 2024 KKR vs RCB and PBKS vs GT: நடப்பு ஐபிஎல் சீசனில் இன்று கொல்கத்தா - பெங்களூரு மற்றும் பஞ்சாப் - குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

IPL 2024
ஐபிஎல் 2024

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 21, 2024, 12:37 PM IST

கொல்கத்தா/பஞ்சாப்: 17வது ஐபிஎல் போட்டித் தொடர் நாட்டின் பல்வேறு மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இதில், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி (KKR vs RCB) மோதுகின்றன.

மேலும், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு (PBKS vs GT) இடையேயான போட்டி, பஞ்சாப் மாநிலம் மோஹாலியில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் கிரிக்கெட் மைதானத்தில் மாலை 7 மணிக்கு நடைபெற உள்ளது. முன்னதாக, 6 போட்டிகளில் விளையாடிய கொல்கத்தா அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில், 7 போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது, பெங்களூரு. கடந்த போட்டிகளில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் வெற்றிக்கனிக்கு மிகவும் நெருங்கிச் சென்று, வெற்றியைத் தவறவிட்டனர். பெங்களூரு அணி, ஏப்ரல் 15ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் தினேஷ் கார்த்திக் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதே ஆட்ட

இதையும் படிங்க:அடுத்தடுத்து சாதனைய படைக்கும் ஹைதராபாத் அணி.. புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்..!

அதேபோல், கொல்கத்தா அணியும் ராஜஸ்தானுக்கு எதிரான கடந்த போட்டியில் கொல்கத்தா அணியின் தொடக்க வீரரான சுனில் நரைன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், அபாரமான ஆட்டத்தை இரு அணிகளும் வெளிப்படுத்திய போதும் அவை தோல்வியை தழுவின. இந்த நிலையில் கொல்கத்தா - பெங்களூரு இடையேயான போட்டி சுவாரசியமானதாக அமையக்கூடும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும், இன்று நடக்க உள்ள மற்றொரு போட்டியில் மோதும் பஞ்சாப் மற்றும் குஜராத் அணியும் கடந்த போட்டிகளில் தோல்வியை சந்தித்திருந்தன. குறிப்பாக, குஜராத் அணி டெல்லிக்கு எதிரான கடந்த போட்டியில் 89 ரன்களில் சுருண்டது. இது நடப்பு சீசனில் குறைந்த ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை ஏழு போட்டிகள் விளையாடியுள்ள பஞ்சாப் அணி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்படியலில் இறுதி வரிசையில் உள்ளது. 2022ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் பட்டம் வென்ற குஜராத் அணியும் இந்த ஆண்டு புள்ளிப்பட்டியலில் கடைசி வரிசையில்தான் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில், இரு அணிகளும் தங்களின் அணியின் பலத்தை நிரூபிக்க இன்று மோத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:வினேஷ் போகத் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி!

ABOUT THE AUTHOR

...view details