சென்னை:சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில் சுற்றுச்சூழலுக்கு இணக்கமாக பேருந்து சேவைகளை நவீனமயமாக்கும் திட்டத்தின் வாயிலாக மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு 22.69 கோடி ரூபாய் மதிப்பிலான 25 புதிய BS-VI தாழ்தள பேருந்துகளின் இயக்கத்தை, போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று கொடி அசைத்து துவங்கி வைத்தார்.
சிறப்பு வசதிகள் கொண்ட தமிழக அரசு பேருந்து:இந்நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், “ மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய 352 தாழ்தள பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தாழ்தள பேருந்தில் பயணம் மேற்கொண்ட அமைச்சர் சா.சி.சிவசங்கர் (Credits- ETV Bharat Tamil Nadu) பல கட்டமாக இதுவரை 170.60 கோடி ரூபாய் மதிப்பிலான 188 தாழ்தள பேருந்துகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதில் 25 புதிய BS-VI தாழ்தள பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட உள்ளது. இந்த பேருந்தில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் எளிதாக ஏறிச் செல்லும் வகையில் சிறந்த தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளது” என்றார்.
இதையும் படிங்க:வேறு மாநிலத்திற்கு செல்கிறதா சாம்சங் தொழிற்சாலை? அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்!
அமைச்சர் மற்றும் அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்பு: இந்நிகழ்வில் போக்குவரத்துத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ், ஜெர்மன் குடியரசின் துணை தூதரகத்தின் பொது துணை தூதர் மிச்செல குச்லர் (Michaela Kuchler), ஜெர்மன் வங்கியின் இந்திய நாட்டிற்கான இயக்குநர் உல்ஃப் முத் (Wolf Muth), முதுநிலை போக்குவரத்து நிபுணர் சுவாதி கண்ணா, மாநகர் போக்குவரத்துக் கழக இணை மேலாண் இயக்குநர் திரு.செ.நடராஜன், சாலை போக்குவரத்து நிறுவன இயக்குநர் சு.ரங்கநாதன், தமிழ்நாடு போக்குவரத்து நிதி கழக இணை மேலாண் இயக்குநர் வெ.வெங்கட்ராஜன், உயர் அலுவலர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டுகொண்டனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்