தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மறக்காம குடையை எடுத்துக்கோங்க.... தமிழகத்தில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு! - Chennai Rain Update

TN Weather Update: தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Regional Meteorological Centre
சென்னை வானிலை ஆய்வு மையம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 31, 2024, 2:50 PM IST

Updated : Feb 1, 2024, 6:31 AM IST

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று (ஜன.31) மற்றும் நாளை (பிப்.1) தென்தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதைத்தொடர்ந்து, பிப்ரவரி 2ஆம் தேதி தென்தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

பின்னர் பிப்ரவரி 6ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 முதல் 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

வெப்ப நிலை மாறுதல்: கடந்த 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டடத்தில் வெப்ப நிலை மிகவும் அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து, தஞ்சை, கோவை, தருமபுரி, மதுரை, நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களிலும் கணிசமாக வெப்பநிலை அதிகரித்துள்ளது. மேலும், கரூர் மாவட்டத்தில் இயல்பை விட மிக அதிகாமான வெப்பநிலை அதிகரித்துள்ளது. மழையானது கடந்த 24 மணி நேரத்தில் எங்கும் பதிவாகவில்லை.

மழைப்பதிவு: ஜனவரி 1ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பதிவான மழையின் அளவு 50.4 மில்லி மீட்டர் ஆகும். இந்த காலகட்டத்தில் இயல்பான அளவு என்பது, 12.2 மில்லி மீட்டர். அதாவது, இயல்பை விட 312% சதவீதம் அதிகம் பெய்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அயோத்தி ராமர் கோயில் பெருமைக்குரியது..! பட்ஜெட் கூட்டத்தில் குடியரசு தலைவர் பேச்சு!

Last Updated : Feb 1, 2024, 6:31 AM IST

ABOUT THE AUTHOR

...view details