சென்னை:பாதுகாப்பு சேவைகளுக்கான உயர்மட்டப் பயிற்சி நிறுவனமான தேசிய பாதுகாப்புக் கல்லூரியுடன் இணைந்து சென்னை ஐஐடி "உத்திசார் தலைமைத்துவம் மற்றும் பொதுக்கொள்கை" பாடத்திட்டத்தில் 'நிர்வாக எம்பிஏ' என்னும் ஓராண்டு கால படிப்பை துவங்கி வைத்துள்ளது. இந்த பாடப்பிரிவின் வகுப்புகள் விரிவுரை அடிப்படையிலான பாடங்கள், சோதனைத் தொகுப்புகள், ஆய்வறிக்கை ஆகியவற்றுடன் 48 வாரங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த படிப்பை இந்தியா மற்றும் நட்புறவு கொண்ட வெளிநாடுகளின் ஆயுதப் படை பணியாளர்கள், அரசின் குடிமைப்பணி சேவை பணியாளர்கள் என ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ், டிஆர்டிஓ பதவியில் இருப்பவர்கள் என தேர்ந்தெடுக்கப்பட்ட மூத்த அதிகாரிகளை உயர் தலைமைப் பதவிகளுக்குத் தயார்படுத்தும் விதமாக அறிவுசார் வளர்ச்சி, உத்திசார் திறமைகளை வளர்ப்பதே இப்பாடத்திட்டத்தின் நோக்கமாகும்.
இந்நிலையில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி கையெழுத்தானது. இதில் சென்னை ஐஐடி மேலாண்மைக் கல்வித்துறை தலைவர் தேன்மொழி, தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் செயலாளர் பிரிகேடியர் ராஜேஷ் ராமன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். மேலும் சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, பாதுகாப்பு அமைச்சக கூடுதல் செயலாளர் தீப்தி மொஹில் சாவ்லா ஆகியோர் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இந்த பாடத்திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி கூறுகையில், "வரும் தலைமுறையினரை காக்க அதிகாரிகளுக்கு சமகால தொழில்நுட்பத்தை பற்றிய ஆழமான புரிதல் தேவைபடுகிறது. இதற்குத் தீர்வுகாணும் விதமாகவே இந்த எம்பிஏ படிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.