திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், குரிசிலப்பட்டு அடுத்த கல்லு குட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் (30). இவர் சென்னையில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு வெங்கடேஸ்வரா நகர்ப் பகுதியைச் சேர்ந்த நந்தினி (28) என்பவரை திருமணம் செய்துள்ளார்.
மேலும், இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் ஏதும் இல்லாத நிலையில், இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு கணவரிடமிருந்து பிரிந்து நந்தினி தனது அம்மா வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். மேலும், நந்தினி புதுப்பேட்டை ரோடு பகுதியில் உள்ள தனியார் பைனான்ஸில் பணியாற்றி வந்துள்ளார்.
இதற்கிடையில், பிரவீன் தனது மனைவியை பலமுறை அழைத்தும் அவர் வராத காரணத்தினால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை தனியார் பைனான்ஸுக்குச் சென்ற பிரவீன், நந்தினியை தனியாக அழைத்து, தன்னுடன் வீட்டுக்கு வர அழைத்ததாகக் கூறப்படுகிறது. அப்போது நந்தினி வர மறுத்துள்ளார்.