திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் உள்ள பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த ஏராளமான பக்தர்கள் கிரிவலப் பாதையில் நடந்து சென்று, ஓம் நமச்சிவாய என்ற முழக்கமிட்டபடி கிரிவலம் சென்று சாமி தரசினம் செய்தனர்.
மேலும், நேற்று (வெவ்வாய்கிழமை) அதிகாலை 4.30 மணியிலிருந்து கோயிலின் ராஜகோபுரம் வாசலில் இருந்து நீண்ட வரிசையில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் காத்திருந்து, அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்தனர். கிரிவலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியது, புற்றீசல் நகர்வது போல் காணப்பட்டது.
இதினிடையே, கிரிவலம் வரும் பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் தரப்பில் குடிநீர், மருத்துவம், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிரிவலப்பாதை முழுவதும் அங்காங்கே ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலை பொருத்தவரை மாதந்தோறும் பௌர்ணமி நாளில் பக்தர்கள் கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.