மதுரை:மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நியூட்ரினோ திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி 2015ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், "நியூட்ரினோ திட்டத்துக்காக தேனி மாவட்டம் பொட்டிபுரம் பகுதியில் ஆயிரம் மீட்டர் ஆழத்துக்குச் சுரங்கம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தால் தேனி பகுதியில் நில வளம் அழியும். மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பசுமைத் தொடர்களுக்கு பேரழிவு ஏற்படும். விவசாயம், தண்ணீர், வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும். மனித உயிர்களுக்கு ஆபத்து நேரிடும். மேலும், ஆய்வு மையம் அமைய உள்ள பகுதியில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் முல்லை பெரியாறு அணையும், 60 கிலோ மீட்டர் தொலைவில் கேரள மாநிலத்தில் இடுக்கி அணையும் அமைந்து உள்ளன.
மக்களை பாதிக்கச் செய்யும் இத்திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு எப்போதும் தமிழகத்தை தேர்வு செய்கிறது. எனவே, நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.