தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளிகள் திறப்பு எதிரொலி; சென்னைக்கு படையெடுத்த தென்மாவட்ட மக்கள்! - Tirunelveli Railway Station

TN School Reopen: கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பை ஒட்டி, நேற்று சென்னையை நோக்கி மக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வந்தனர்.

நெல்லை ரயில் நிலையம்
நெல்லை ரயில் நிலையம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 10, 2024, 9:19 AM IST

திருநெல்வேலி:தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் பொதுத்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு, ஜூன் 6ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கோடை வெப்பத்தின் தாக்கம் காரணமாக, பள்ளிகள் திறப்பு ஜூன் 10ஆம் தேதியாக மாற்றப்பட்டது.

இந்த நிலையில், இன்று பள்ளிகள் திறக்கப்படுவதால், கோடை விடுமுறைக்காக சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்குச் சென்றிருந்த பொதுமக்கள் திரும்ப ஆரம்பித்தனர். அதனடிப்படையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பேருந்து மற்றும் ரயில்களில் பயணம் மேற்கொண்டனர்.

இதனால் நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக மதுரை, திருச்சி, தஞ்சாவூர் வழியாக சென்னை தாம்பரம் வரை இயக்கப்படும் அந்தியோதயா ரயிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. ரயில் பயணம் செய்ய மாலை 5 மணியில் இருந்தே நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்த ரயில் பயணிகள், தங்கள் குழந்தைகளுடன் கூட்டம் கூட்டமாக போட்டி போட்டு ஏறினர்.

இதையும் படிங்க: நெல்லை ஆனித்தேரோட்டம்; தேரை சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரம்!

ABOUT THE AUTHOR

...view details