சென்னை:சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில், அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனை ஆழ்வார்பேட்டையில் உள்ள செயின்ட் மேரீஸ் சாலையில் புதிதாக 10 மாடி கொண்ட மருத்துவமனையை கட்டி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
கட்டுமான பணியில் ஆழ்குழாய் அஸ்திவாரம் அமைக்கும் பணி காரணமாக, சுற்றுப்புற பகுதியில் கடுமையான ஒலி மாசு ஏற்படுவதாக தெரிவித்துள்ளார். அந்த பகுதியை பொருத்தவரை பெரும்பாலானவர்கள் மூத்த குடிமக்கள் வசித்து வருவதாகவும், பள்ளி மற்றும் பல்வேறு குடியிருப்பு இருப்பதால் கட்டுமான பணிகளின் சத்தத்தால் அனைவருக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் சுட்டிகாட்டியுள்ளார்.
நள்ளிரவையும் தாண்டி அதிகாலையும் பணிகள் நடைபெறுவதாகவும், இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திற்கு, கட்டுமான சத்தத்தை குறைக்க கூறி கடிதம் அனுப்பியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட ஒலி மாசு ஏற்படுவதால், அந்த பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.