மதுரை:மதுரை திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த வள்ளி, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தண்ணீர் குழாய் அமைப்பதற்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த தனது கணவரின் இறப்புக்கு இழப்பீடு வழங்கக் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான வழக்கு நேற்று (ஜனவரி 7) நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, "மனுதாரரின் கணவர் தனியார் பள்ளியில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி வேலைக்கு சென்று திரும்பும் போது, உச்சையா கோயில் அருகே தண்ணீர் குழாய் அமைப்பதற்காக தனியார் ஒப்பந்த நிறுவனம் தோண்டிய குழியில் விழுந்து உயிரிழந்துள்ளார்.