சென்னை: ’விடாமுயற்சி’ படத்தின் சென்சார் அறிக்கை இணையத்தில் வைரலாகி வருகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்து வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 2023ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தொடங்கிய ’விடாமுயற்சி’ படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.
அஜித் நடிப்பில் கடைசியாக 2022இல் ’துணிவு’ திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியானது. இதனைத்தொடர்ந்து அஜித் ’விடாமுயற்சி’ மற்றும் ’குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் ஒரே நேரத்தில் நடித்து வந்தார். படப்பிடிப்பின் போது பல தடைகளை சந்தித்த விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. கடைசி மூன்று வருடங்களாக அஜித் படம் வெளியாகாத நிலையில், ரசிகர்கள் அவரை திரையரங்கில் கொண்டாட காத்திருந்தனர்.
ஆனால் கடைசி நேரத்தில் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. விடாமுயற்சி திரைப்பட வெளியீடு தள்ளிப் போனதற்கு அப்படம் breakdown படத்தின் ரீமேக் எனவும், அப்படக்குழுவினரிடம் ரீமேக் உரிமையை பெறவில்லை என சமூக வலைதளத்தில் பேசப்பட்டது. இந்நிலையில் விடாமுயற்சி திரைப்படம் இந்த ஜனவரி மாத இறுதியில் வெளியாகும் என கூறப்படும் நிலையில், படம் தணிக்கை செய்யப்பட்டு, யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
#VidaaMuyarachi CBFC Report.
— Karthik Ravivarma (@Karthikravivarm) January 9, 2025
Duration: 2hrs 30mins 46secs
Certified: U/A 16+ pic.twitter.com/68IeZfUpeG
விடாமுயற்சி படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 30 நிமிடஙக்ளாக உள்ளது. மேலும் விடாமுயற்சி படத்தின் சென்சார் சான்றிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த சென்சார் சான்றிதழில் பல ஆபாச வார்த்தைகளை தணிக்கை குழு நீக்கியுள்ளது. அதேபோல் சோடியம் ஹைட்ராக்சைடு என்ற வார்த்தையும் நீக்கப்பட்டுள்ளது. விடாமுயற்சி திரைப்படம் சென்சார் செய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஒரு இரவில் நடக்கும் பல கொலைகள்... சிபி சத்யராஜின் 'டென் ஹவர்ஸ்' பட டிரெய்லர் வெளியீடு! - TEN HOURS TRAILER
தற்போது பொங்கல் பண்டிகை ரேஸிலிருந்து விடாமுயற்சி திரைப்படம் தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், கேம் சேஞ்சர், வணங்கான், காதலிக்க நேரமில்லை, தருணம், டென் ஹவர்ஸ், மெட்ராஸ்காரன், உள்ளிட்ட 10 திரைப்படங்கள் வெளியாகிறது. அதேபோல் அஜித் நடித்துள்ள மறொரு திரைப்படமான குட் பேட் அக்லி வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி வெளியாகிறது.