ETV Bharat / state

லாரி விபத்து: சாலையோரம் சிதறிய காய்கறிகளை போட்டி போட்டு அள்ளிச்சென்ற பொதுமக்கள்! - RANIPET KARNATAKA BUS ACCIDENT

ராணிப்பேட்டை அருகே பக்தர்களை ஏற்றி வந்த பேருந்து மீது காய்கறி ஏற்றி வந்த லாரி நேருக்கு நேர் மோதி விபத்தில், சாலையோரம் கொட்டிக் கிடந்த காய்கறிகளை மக்கள் மூட்டை மூட்டையாக அள்ளிச் சென்றனர்.

சாலையோரம் கிடந்த காய்கறிகளை அள்ளிச் செல்லும் மக்கள்
சாலையோரம் கிடந்த காய்கறிகளை அள்ளிச் செல்லும் மக்கள் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 9, 2025, 2:39 PM IST

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே பக்தர்களை ஏற்றி வந்த பேருந்து மீது காய்கறி ஏற்றி வந்த லாரி நேருக்கு நேர் மோதி விபத்தில், நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். அப்போது, காய்கறிகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்ததால், அந்த லாரியில் இருந்த 16 டன் காய்கறிகளை சாலையில் சிதறிக் கிடந்தது. அப்போது சாலையோரம் கொட்டிக் கிடந்த காய்கறிகளை பொதுமக்கள் மூட்டை மூட்டையாக அள்ளிச்சென்ற காட்சி வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் முல்பாகல் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்குச் சென்று வீடு திரும்பும் போது ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அடுத்த எம்ராய்டு நகர் பகுதி சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்துள்ளது.

அப்போது அந்த பேருந்துக்கு முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரியை முந்தி செல்ல முயன்றபோது, எதிரே வந்த கர்நாடக மாநிலம் கோலார் பகுதியைச் சேர்ந்த காய்கறி லாரி மீது நேருக்கு நேர் மோதிய விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து சம்பவத்தில் ஈச்சர் லாரியில் வந்த நான்கு பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், பேருந்தில் பயணித்த 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். தற்போது, விபத்தில் சிக்கிக் காயமடைந்த நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க: டிப்பர் லாரி, கர்நாடக அரசு பேருந்து, ஈச்சர் லாரி ஒன்றோடு ஒன்று மோதி விபத்து! 4 பேர் பலி

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இந்த விபத்தில், கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த சோம சேகர் (30), லாரி ஓட்டுநர் மஞ்சுநாத் (31), கிளினர் சங்கரா (32), காய்கறி உரிமையாளர் கிருஷ்ணப்பா (65) ஆகிய நான்கு பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, விபத்தில் சிக்கிய வாகனங்களை கிரேன் மூலம் அப்புறப்படுத்தி, போக்குவரத்தைச் சீர் செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது, விபத்து காரணமாக சாலையோரம் கொட்டிக் கிடந்த காலிபிளவர், பீட்ரூட், பீன்ஸ், கொத்தமல்லி, மக்காச்சோளம் உள்ளிட்ட சுமார் 16 டன் காய்கறிகளை பொதுமக்கள் மூட்டை மூட்டையாக அள்ளிச் சென்றனர்.

போக்குவரத்தைச் சரி செய்ய ஏற்கனவே காவல்துறையினர் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி வைத்த நிலையில், தற்போது பொதுமக்கள் காய்கறி அள்ளிச் செல்ல கூட்டம் கூட்டமாகச் சாலையில் கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.