தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திண்டுக்கல் மாநகராட்சி கடைகளுக்கு நடந்த ஏலம் ரத்து; நீதிமன்ற அதிரடி உத்தரவுக்கு என்ன காரணம்? - Dindigul corporation shop auction - DINDIGUL CORPORATION SHOP AUCTION

திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான 34 கடைகளுக்கு உரிய விதிகளை பின்பற்றாமல் ஏலம் விடப்பட்டதால், ஏலத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை கிளை
உயர் நீதிமன்ற மதுரை கிளை (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 30, 2024, 4:57 PM IST

மதுரை:திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனபாலன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ''நான் திண்டுக்கல் மாநகராட்சி மாமன்ற உறுப்பினராக உள்ளேன். திண்டுக்கல் மாநகராட்சி சார்பாக காமராஜர் பேருந்து நிலையத்தில் உள்ள 34 கடைகள் வாடகைக்கு விடுவதற்கான ஏல அறிவிப்பை நடத்துவதற்கான மாநகராட்சி கூட்டம் 2022 நவம்பர் 17ம் தேதி நடந்தது.

மேலும், 34 கடைகளுக்கான ஏலம் நடைபெற்றது. இதில், மொத்தமாக 47 நபர் மட்டுமே கலந்து கொண்டனர். தமிழ்நாடு வெளிப்படை தன்மை ஏல அறிவிப்புச் சட்டத்தின் படி, ஏலம் நடைபெறுவதற்கு 15 நாட்களுக்கு முன்பு உள்ளூர் அல்லது மாவட்ட அளவிலான செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யப்படவில்லை. கோவை பதிப்பில் வெளியிட்டனர். அனைத்து பொதுமக்களும் கலந்து கொள்ளும் படி இருக்க வேண்டும். ஆனால், திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட காமராஜர் பேருந்து நிலையத்தில் உள்ள 34 கடைகளுக்கான ஏலம் அவ்வாறு நடைபெறவில்லை.

இதையும் படிங்க:மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து வாலிபர் பலி..சென்னையில் மீண்டும் சோகம்

எனவே, மாநகராட்சி கடைகள் ஏலம் மூலம் ஒதுக்கீடு செய்த அறிவிப்பிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். மேலும், இந்த 34 கடைகளுக்கான ஒதுக்கீட்டினை ரத்து செய்து, மீண்டும் ஏல அறிவிப்பை முறையாக வெளியிட்டு முறையாக நடத்த உத்தரவிட வேண்டும்'' என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த பொது நல மனு கடந்த சில வாரங்களுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், திண்டுக்கல் மாநகராட்சி 34 கடைகளுக்கான ஏலத்தில் தமிழ்நாடு ஏல அறிவிப்புச் சட்டம் முறையாக பின்பற்றப்படவில்லை. எனவே, திண்டுக்கல் மாநகராட்சிக்கு சொந்தமான 34 கடைகளில் ஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு கடைகளை ஒதுக்கீடு செய்ய இடைக்கால தடை விதித்து தீர்ப்புக்காக ஒத்தி வைத்து உத்தரவிட்டு இருந்தனர்.

இந்த நிலையில் இந்த மனு , நீதிபதிகள் சுப்பிரமணியன், , விக்டோரியா கவுரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 34 கடைகளுக்கான ஏலம் ரத்து செய்யப்படுகிறது. புதிதாக ஏலம் அறிவிப்பு வெளியிட்டு., விதிமுறைகளை பின்பற்றி, வெளிப்படை தன்மையுடன் ஏலம் நடத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details