சென்னை: தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் அவசர கால மேலாண்மை கட்டுப்பாட்டு அலுவலகத்தில் ஏசியில் இருந்து திடீரென வாயு கசிவு ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்டு 13 ஊழியர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை தேனாம்பேட்டை, DMS வளாகத்தில் அவசரகால மேலாண்மை கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 102,104,108 அமரர் ஊர்தி உதவி எண் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குளிர்சாதன பெட்டியில் இருந்து திடீர் வாயு கசிவு ஏற்பட்டது. இதில் அப்போது அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த ஊழியர்களுக்கு தொண்டை எரிச்சல், இருமல் ஏற்பட்டது. சிலர் திடீரென மயக்கம் அடைந்தனர்.