தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்த வருஷம் எந்த ட்ரெண்டிங்கில் விநாயகர்? சிலைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரம்! - VINAYAGAR idols MAKING

Vinayagar Idols: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கும்பகோணத்தில் பல வண்ணங்களில் சிலைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், சிலைகள் எவ்வாறு தயார் செய்யப்படுகின்றன, அவை எவ்வளவு ரூபாய்க்கு விற்கப்படுகின்றன என்பதை பற்றி விவரிக்கிறது இச்செய்தித் தொகுப்பு.

விநாயகர் சிலை
விநாயகர் சிலை (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 19, 2024, 6:45 PM IST

தஞ்சாவூர்:இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி விழாவும் ஒன்றாகும். இந்த விழா நாடு முழுவதும் கொண்டாடப்படும். பொது இடங்களில் பிரமாண்டமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழாவானது வரும் செப்டம்பர் 7ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

சிலை தயாரிக்கும் திலீப்குமார் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இதற்கான ஏற்பாடுகள் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் கோயில்கள் சார்பில் செய்யப்பட்டுள்ளன. மேலும், விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான வீரசைவ மடத்தில், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பலரும் குடும்பம் குடும்பமாக வந்து இங்கேயே தங்கி, 1 அடி முதல் 10 அடி வரையிலான விதவிதமான விநாயகர் சிலைகளை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் கிட்டத்தட்ட 2 வாரங்களே உள்ள நிலையில், தற்போது இறுதிகட்டப் பணியான வண்ணம் தீட்டும் பணி நடைபெற்று வருகிறது.

விநாயகர் சிலை தயாரிப்பு: விநாயகர் சிலைகளை இயற்கையோடு ஒன்றிடும் வகையில், மரவள்ளிகிழங்கு மாவு, பேப்பர் கூழ், சிறு சிறு குச்சிகள், தேங்காய் நார் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கின்றனர். சிலைகளில் ரசாயண வண்ணங்களுக்குப் பதிலாக, வாட்டர் கலர் வண்ணங்களை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு கலர் வண்ணங்களைப் பயன்படுத்தி சிலைகள் விஜர்சனம் செய்யப்படும் போது தண்ணீர் மாசு ஏற்படாது.

விநாயகர் சிலை வகைகள்: ராமர் விநாயகர், அன்னபட்சி விநாயகர், சிம்ம விநாயகர், ரிஷப விநாயகர், மான் விநாயகர், சூரசம்ஹார விநாயகர், குழந்தை வரம் அருளும் விநாயகர், சிவன் கோல விநாயகர், சயனகோல விநாயகர் என பல விதமான விநாயகர் சிலைகள் உள்ளன. இந்த சிலைகள் ரூ.1,000 முதல் 35 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து சிலை தயாரிக்கும் திலீப்குமார் கூறுகையில், “நாங்கள் ராஜஸ்தானில் இருந்து கும்பகோணத்திற்கு வந்து 12 வருடங்கள் ஆகின்றன. கடந்த 12 வருடங்களாக இங்கேயே தங்கி விநாயகர் சிலைகளைச் செய்து வருகிறோம். ரூ.250 முதல் 35 ஆயிரம் வரை விநாயகர் சிலைகள் உள்ளன. விநாயகர் சதுர்த்திக்கு 5 மாதங்களுக்கு முன்னதாகவே சிலைகள் தயார் செய்யப்படுகின்றன. எங்கள் மனதிற்குப் பிடித்து இந்த சிலைகளை தயார் செய்து வருகிறோம்" என தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை விநாயகர் சிலைகள் 10 அடி வரை இருக்க வேண்டும் என தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க :கும்பகோணம் அருகே கற்சிவலிங்கம் திருட்டு.. போலீசார் தீவிர விசாரணை! - Sivalingam idol theft

ABOUT THE AUTHOR

...view details