தஞ்சாவூர்: தஞ்சையை அடுத்த பள்ளியக்ரஹாரம் கூடலூர் சாலையில் சிலர் காரில் பதுக்கி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தஞ்சை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சந்திரா, தனிப்படை போலீசார் இன்ஸ்பெக்டர் டேவிட் ஆரோக்கியராஜ் தலைமையிலான கிழக்கு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் இரண்டு கார்கள் நின்றுள்ளன. போலீசார் இரண்டு கார்களில் இருந்த 4 பேரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை போலீசாரிடம் தெரிவித்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காருக்குள் சோதனையிட்டனர். அப்போது காரில் 65 பொட்டலங்களில் 136 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் மதுரை ஆரப்பாளையம் அருகே உள்ள கம்மாகரையை சேர்ந்த ரவிச்சந்திரன் (44), மதுரை கூடல் நகரை சேர்ந்த சுப்ரமணி (45), புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பகுதியை சேர்ந்த டேவிட் பெர்னாண்டோ (30), சேமங்கொட்டை பகுதியை சேர்ந்த அய்யப்பன் (29) என்பது தெரிய வந்தது.
இதையும் படிங்க:திருமண நாளில் பறிபோன பெண்ணின் உயிர்... பரிதவிக்கும் மூன்று பிள்ளைகள்..! தஞ்சையில் சோகம்..!