தஞ்சாவூர்: தமிழக அரசு மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியதைக் கண்டித்தும், ரேஷன் கடைகளில் பாமாயில், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நிறுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதை கண்டித்தும் தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகில் அதிமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக அரசை கண்டித்து அதிமுகவினர் கண்டன கோஷம் எழுப்பினர்.
அதன் பின்னர், அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாண்டியராஜன், “சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜியை வெளியே எடுப்பதற்கான முயற்சியை எடுங்கள். அதற்காக இன்னொருவரை பிடித்து உள்ளே வைப்பது கண்டிக்கத்தக்க செயலாகும்.
துணை முதலமைச்சர் என்று கூறுவது, நானும் ரெளடி தான் என்பது போல, நானும் துணை முதலமைச்சர் என நான்கு பேர் கிளம்பியுள்ளனர். இதில் ஒருவருக்கு பதவி கொடுத்தாலும், மற்ற மூவருக்கு போட்டி, பொறாமை வரும். உத்தரப் பிரதேசத்தில் இருப்பது போல 3 துணை முதலமைச்சர்களைக் கொண்டு வருவார்களா என்று தெரியாது. இருக்கும் ஒரு முதலமைச்சரே வேலை செய்யவில்லை. இனிமேல் எத்தனை முதலமைச்சர்களைக் கொண்டு வந்து என்ன செய்யப் போகிறீர்கள்?