தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"3 ஆண்டு ஆட்சியில் மக்கள் மீது 30 ஆண்டுக்கான சுமை" - ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு! - Three years of DMK - THREE YEARS OF DMK

AIADMK Ex Minister R.B.Udhayakumar: மூன்று ஆண்டுகால திமுக ஆட்சியில் மக்கள் மீது 30 ஆண்டுகளுக்கான சுமையை திமுக அரசு சுமத்தியுள்ளதாக என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

ஆர் பி உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு
ஆர் பி உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு (Credit - ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 7, 2024, 4:15 PM IST

Updated : May 7, 2024, 4:56 PM IST

ஆர் பி உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு (Credit - ETV Bharat Tamilnadu)

மதுரை:மதுரையின் அட்சய பாத்திரம் அறக்கட்டளையின் 4ஆம் ஆண்டு தொடக்க விழா, மதுரை காந்தி மியூசியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி மற்றும் உணவுகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும் போது, "திமக அரசு மூன்று ஆண்டுகள் முடிந்து, நான்காம் ஆண்டு தொடக்க விழாவைக் காண்கிறது. மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி ஏற்றம் என இந்த மூன்று ஆண்டுகளில் 30 ஆண்டுக்கான சுமைகளை மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.

ரூ.30 ஆயிரம் கோடி ஊழல் செய்துவிட்டு அந்த பணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், அவரது மருமகன் சபரீசனும் எங்கே வைப்பது என்று தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட ஆடியோ மூலம் தமிழக மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது குறித்து எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியும், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை. இந்த கோடை வெயில் காலங்களில் நீர்த்தேக்கங்களில் 17 சதவீதம் தான் நீர் இருப்பு உள்ளது. மேலும், குடிநீருக்குப் பற்றாக்குறையைச் சரி செய்ய அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை" எனக் குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், "520 தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்கள். அதில் எத்தனை சதவீதம் நிறைவேற்றி உள்ளார்கள் என்று மனசாட்சியுடன் கூற முடியுமா? நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று கூறினார்கள். அது கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது, கல்விக் கடன் ரத்து என்று கூறினார்கள். கேஸ் மானியம் 100 ரூபாய் தருவோம் என்று கூறினார்கள்.

பெட்ரோல் விலையைக் கண்துடைப்பாக மட்டும் குறைத்து விட்டு, டீசலுக்கு விலையைக் குறைக்கவில்லை. அனைத்து குடும்பங்களுக்கு ரூ.1000 வழங்குவோம் என்று கூறினார்கள். ஆனால், தமிழகத்தில் 2 கோடியே 15 லட்சம் குடும்பங்களுள், 1 கோடி குடும்பங்களுக்குக் கொடுத்துவிட்டு பாரபட்சம் பார்க்கிறார்கள்.

அதிமுக அரசின் திட்டங்களான தாலிக்கு தங்கம், விலையில்லா மடிக்கணினி, அம்மா மினி கிளினிக் உள்ளிட்ட திட்டங்கள் அனைத்தையும் நிறுத்திவிட்டனர். இன்றைக்கு மக்கள் மகிழ்ச்சியாக உள்ளதாக முதலமைச்சர் கூறுகிறார். மக்கள் மனதில் மகிழ்ச்சி இல்லை, வீழ்ச்சி தான் உள்ளது" என்று விமர்சித்தார்.

மேலும், "இன்றைக்குத் தமிழகத்தில் கடுமையான மின் பற்றாக்குறை ஏற்படுகிறது அதை சமன் செய்ய அரசு முன்வரவில்லை. எப்போதெல்லாம் திமுக ஆட்சி வருகிறதோ, அப்போதெல்லாம் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படும். அதைத்தான் எடப்பாடி பழனிசாமி அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

நில அபகரிப்புக்கு முகவரியே திமுக தான், கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் நில அபகரிப்பைத் தடுக்க தனிப் பிரிவை உண்டாக்கி, அதன் மூலம் பல இடங்களை மீட்டுக் கொடுக்கப்பட்டது. ஆனால், தற்போது நில அபகரிப்பு தொடர்ந்து நடக்கிறது. மக்கள் தங்கள் நிலத்தைக் காணவில்லை என்று கண்ணீர் விடுகின்றனர்" எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம் விவகாரத்தில் கொலையா? தற்கொலையா? என்ற முடிவு இன்னும் வரவில்லை. இது காவல்துறையின் மெத்தனமா? அரசியல் குறுக்கீடா? என்று தெரியவில்லை. காவல்துறையைச் சுதந்திரமாக விட்டால் ஒரு மணி நேரத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து விடுவார்கள். ஆனால் இன்றைக்கு காவல்துறை செயல் இழந்து உள்ளது" என்று குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க:நெல்லை ஜெயக்குமார் மர்ம மரணம்; உடற்கூறாய்வு முடிவில் வெளிவந்த பகீர் தகவல்!

Last Updated : May 7, 2024, 4:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details