நீலகிரி:தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பறக்கும் படையினர் பல பகுதிகளில் வாகனங்களில் எடுத்துச் செல்லும் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
அதன்படி, பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று, கோத்தகிரி மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலை ஜக்கணரை சக்த்தா ஹட்டி பகுதியில், திமுக ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணனின் சொகுசு காரை, திமுக இளைஞர் அணியைச் சேர்ந்த நவீன் ஓட்டி வந்தபோது, தேர்தல் பறக்கும் படையினர் காரை சோதனை செய்துள்ளனர்.