சென்னை: மலர் மருத்துவம் என்பது பாட்டி வைத்தியம் போன்ற மருத்துவ முறையாகும். இந்த மருத்துவமுறை ஒருவகையான உளவியல் சார்ந்த பயணிக்கும் மருத்துவமுறை இவை மனதின் போக்குக்கு தீர்வு தருவதால் உடல் தன் செயல்பாட்டை சீராக்கி மனதிற்கு புதிய தெம்பு தருகின்றனர் என்கிறார் மலர் மருத்துவர் டாக்டர். மஞ்சுளா. இதுகுறித்து அவர் கூறுகையில்,
மலர் மருத்துவமும் வரலாறும்:இந்த மலர் மருத்துவ முறை கண்டுபிடித்தவர் டாக்டர். எட்வர்ட் பேட்ச் இங்கிலாந்தில் பிறந்தவர் இவர் மருத்துவதில் எம்.பி.பி.எஸ் மற்றும் எஃப்.ஆர்.சி.எஸ் படிப்புகளை கற்றவர். இவர் லண்டனில் உள்ள மலர்களில் மருத்துவ குணங்கள் உடைய மலர்களை கண்டறிய ஆராய்ச்சியில் ஈடுப்பட்டார்.
அதில் கண்டுப்பிடிக்க பட்ட 38 மலர்களின் மருத்துவ குணத்தை வரிசை படுத்தி உடல் நோய்களுக்கு ஏற்ற தீர்வை மனநிலையை மாற்றும் மூலம் அளிக்கும் முறை நிருபித்து காட்டியுள்ளார். இவர் மறைந்து 100ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன்றைக்கும் அவரது மருத்துவ தொண்டை மருத்துவ உலகம் வியந்து பார்கிறது. இவரின் மூல மந்திரம் ’மனநிலைக்கு மருந்து’ என்பதாகும்.
எங்கே கிடைக்கும் இந்த மலர் மருந்துகள்:இந்த வகை மருந்துகள் லண்டன் காட்டில் பூக்கக்கூடிய மலர்களைக் கொண்டு செய்யக்கூடியவை. இவை டாக்டர் எட்வர்ட் பேட்ச் யுனிவர்சிட்டியில் தான் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் விநியோகம் செய்யப்படுகிறது. நங்கள் இதை லண்டனிலிருந்து வாங்கிதான் மருத்துவ தீர்வுகளாக பறிந்துரைக்கிறோம். ஆனால் தற்பொது இந்த மலர் மருந்துகள் லண்டனிலிருந்து வாங்கி நமது வீட்டுக்கு அருகில் இருக்கக்கூடிய ஒரு ஹோமியோபதி கடையிலே பெற்றுப்கொள்ளும் வசதி வந்துவிட்டது.இந்த மருந்துகள் இயற்கையான முறையில் தயாரிக்கப்படுவதால் எந்த விதமான விளைவுகளும் இல்லாதவை.