தூத்துக்குடி:தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 265க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று மீன்பிடி தொழிலாளர் சங்கத்தினர் 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி பொது வேலை நிறுத்தத்தை அறிவித்தனர்.
அதில், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள அனைத்து விசைப்படகுகளிலும் 6 சதவீதம் தான் வட்டம் பிடித்தம் செய்ய வேண்டும், விசைப்படகுகளுக்கு எந்த டீசல் பிடிக்கப்படுகிறதோ அதன் அடிப்படையில் தான் டீசல் விலை கணக்கிடப்பட வேண்டும், மடி செட்டப், ஆயில், ஸ்டோர், ஐஸ் மட்டும் தான் பொதுவில் பிடித்தம் செய்ய வேண்டும், விசைப்படகில் தொழில் செய்யும் விசைப்படகு ஓட்டுநரை இறக்கி விடும்போது, அந்த ஓட்டுநர் விசைப்படகில் சேரும் முன்னர் தொழிலாளர் சங்கத்தை அணுகி தான் சேர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் பொது வேலை நிறுத்தத்தை அறிவித்தனர்.