தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"தீபாவளி புதிய ரக பட்டாசுகள் விற்பனை அதிகரிப்பு".. சிவகாசி வியாபாரிகள் மகிழ்ச்சி!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பட்டாசு கடைகளில் தற்போது பட்டாசு விற்பனை சூடுபிடித்துள்ளது.

பட்டாசு விற்பனையாளர் விஜய்நாத்
பட்டாசு விற்பனையாளர் விஜய்நாத் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 24, 2024, 6:08 PM IST

விருது:தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பட்டாசு கடைகளில் தற்போது பட்டாசு விற்பனை சூடு பிடித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் ஆடி பதினெட்டை முன்னிட்டு பூஜையுடன் பட்டாசு கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டும்.

ஆனால் இந்த ஆண்டு எதிர்பார்த்ததை விற்பனை இல்லாமல், தற்போது ஆயுத பூஜை முடிந்த பின்பு பட்டாசு விற்பனை சூடுபிடிக்கத் துவங்கியுள்ளதாக பட்டாசு விற்பனையாளர்கள் கூறுகின்றனர். இந்த ஆண்டு குழந்தைகள் மற்றும் பெரியவர்களைக் கவரும் விதமாக லாலிபாப், பாப்கான், ஈமு எஃகு, ஐ கோன், ரோடேட்டிங்ஸ் ஸ்பார்குலர் போன்ற பல்வேறு புதிய ரக பட்டாசுகளும் விற்பனைக்கு வந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர்.

பட்டாசு விற்பனையாளர் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

மேலும் பல்வேறு வண்ணங்களில் வானில் சென்று வர்ண ஜாலங்களை காட்டக்கூடிய பேன்சீரக பட்டாசுகளும் விற்பனைக்கு வந்துள்ளது. இதனால் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களிலும் இருந்தும் ஏராளமான ஆர்டர்கள் வருவதாகவும் கூறுகின்றன.

இதையும் படிங்க:தீபாவளிக்கு ட்ரெயினு, பஸ்னு அடுச்சு புடுச்சு ஊருக்கு போகாதீங்க.. பிளைட்ல ஜம்முன்னு போங்க!

இதுகுறித்து பட்டாசு விற்பனையாளர் விஜய்நாத் கூறுகையில்,"கடந்த ஆண்டு ஒப்பிடும்போது இந்த ஆண்டு புதிய ரக பட்டாசுகள் நிறைய வந்துள்ளது. இதனால் விபாரமும் அதற்கு ஏற்றார் போல் நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த ஆண்டு வியாபாரம் கொஞ்சம் தாமதமாகதான் தொடங்கியது. மழை மற்றும் அண்மையில் வெடி விபத்துகள் காரணமாக இந்தாண்டு பட்டாசுகள் வருவதற்கு கொஞ்சம் காலதாமதம் ஆகிவிட்டது.

தீபாவளி பண்டிகைக்கு ஐந்து நாட்களுக்கு முன்பே வெளியூர்களுக்கு செல்லக்கூடிய டிரான்ஸ்போர்ட்டுகள் நிறுத்தப்படும். இதனால் தாமதமாக வரக்கூடிய ஆர்டர்களை அனுப்ப முடியாத சூழல் ஏற்பட்டுவிடுகிறது. இதனால் முன் கூட்டியே ஆர்டர் செய்யுமாறு வாடிக்கையாளர்கள் மற்றும் வியாபாரிகளை அறிவுறுத்தி வருகின்றோம். கடந்த ஆண்டு ஒப்பிடும்போது இந்த ஆண்டு விலையில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details