தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெருங்கும் தீபாவளி..பட்டாசு விற்பனை சங்கத்தினர் தமிழக அரசுக்கு வைத்துள்ள 'வெயிட்டான' கோரிக்கை!

ஆன்லைன் பட்டாசுகள் அனைத்தும் தர மற்றவை. அரசு இதனை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டாசு விற்பனை சிறு வியாபாரிகள் நலச்சங்கத்தினர் தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பட்டாசு விற்பனை சிறு வியாபாரிகள் நலச்சங்கத்தினர்
பட்டாசு விற்பனை சிறு வியாபாரிகள் நலச்சங்கத்தினர் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 9, 2024, 7:31 PM IST

கோயம்புத்தூர் :கோயம்புத்தூர் பத்திரிக்கையாளர் மன்றத்தில் மாவட்ட பட்டாசு விற்பனை சிறு வியாபாரிகள் நலச்சங்கத்தின் தலைவர் சின்னுசாமி, செயலாளர் பாரதிமோகன், அமைப்பாளர் ராமையா ஆகியோர் ஆன்லைன் பட்டாசு வர்த்தகத்தால் சிறு வியாபாரிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய அவர்கள், "ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்யக்கூடாது என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. இருந்தாலும், ஆன்லைன் வர்த்தகம் நடைபெறுகிறது. இதனால் சிறு வியாபாரிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.

ஆன்லைன் விற்பனையால் அரசிற்கு எந்த லாபமும் இல்லை. ஆன்லைன் விற்பனையை அரசு தடை செய்ய வேண்டும். ஆன்லைன் மூலம் பட்டாசுகளை ஆர்டர் செய்யும் பொழுது பாதுகாப்பில்லாமல் வழக்கமான ட்ரான்ஸ்போர்ட் வாகனங்களிலோ, கார்களிலோ எடுத்து வருகின்றனர். தள்ளுபடி என்ற பெயரில் தரம் இல்லாத பட்டாசுகளை விற்பனை செய்கின்றனர்.

பட்டாசு விற்பனை சிறு வியாபாரிகள் நலச்சங்கத்தினர் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

ஆன்லைனில் போலி விளம்பரங்களை கொடுத்து தரம் இல்லாத பட்டாசுகளை விற்பனை செய்கின்றனர். இது போன்று விற்பனை செய்பவர்கள் ஜிஎஸ்டி பில் தருவதில்லை. இதனால் பட்டாசுகளை வாங்கிக்கொண்டு பொதுமக்களும் புகார் அளிக்க முடியாது.

இதையும் படிங்க :சிவகாசி அருகே தடை செய்யப்பட்ட ரூ.4 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் அழிப்பு!

குறிப்பாக, உற்பத்தி உரிமம் இல்லாத கம்பெனியினர் தான் ஜிஎஸ்டி கட்டாதவர்கள். அவர்கள் தான் இது போன்ற வேலைகளை செய்கின்றனர். ஆன்லைன் பட்டாசுகள் அனைத்தும் தர மற்றவை. அரசு இதனை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வியாபார உரிமம் 10 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படும் நிலையில் அதனை 15 நாட்களாக நீட்டித்து தர வேண்டும். பட்டாசு வெடிப்பதற்கான நேரக் கட்டுப்பாடுகளையும் அதிகரிக்க வேண்டும். மேலும், சரவெடியை பழைய முறைப்படி கெமிக்கல் கொண்டு தயாரிக்க அரசு அனுமதி தர வேண்டும். ஏனென்றால், சரவெடியை அரசு கூறிய நிபந்தனைகளின் படி தயாரிக்க இயலாது.

மேலும், தீயணைப்புத் துறையின் அறிவுறுத்தலின்படி பட்டாசுகளை எவ்வாறு வெடிக்க வேண்டும் என்பது குறித்து அனைத்து பட்டாசு கடைகளிலும் நோட்டீஸ் வழங்க இருக்கிறோம். இந்த தீபாவளியை விபத்தில்லாத தீபாவளியாக கொண்டாடுவோம்" என தெரிவித்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details