சிவகங்கை:சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் 13 பெட்டிகளுடன் பல்லவன் அதிவிரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த நிலையில், நேற்று (செப்.30) அதிகாலை 5.30 மணிக்கு காரைக்குடியில் இருந்து சென்னைக்கு ரயில் புறப்பட்டது.
அதை அடுத்து, ரயில் புறப்பட்ட சிறுது நேரத்திலேயே செட்டிநாடு ரயில் நிலையம் அருகே பள்ளத்தூர் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது, கடைசிப் பெட்டிக்கு முந்தைய பெட்டியில் திடீரென பிரேக் பழுதாகி பைண்டிங் பழுதாகி புகை வந்துள்ளது. ஆகையால், பயணிகளின் பாதுகாப்பு கருதி ரயில் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டது.
ரயில் விபத்தின் போது பயணிகள் பதறியடித்து ஓடும் காட்சி (Credits - ETV Bharat Tamil Nadu) இதையும் படிங்க: சென்னையில் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த கார்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!
பின்னர் தகவலறிந்த ரயில்வே அதிகாரிகளும், ரயில்வே பாதுகாப்பு போலீசாரும் விரைந்து சென்று ரயில் உள்ள பழுதை நீக்க முயற்சி செய்தனர். ஆனால், சிறிது நேரத்திலேயே புகை வந்த என்ஜினில் இருந்து தீப் பற்றி எரிந்துள்ளது. அப்போது ரயில்வே அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
அப்போது சுமார் ஒரு மணி நேரமாக ரயில் அங்கேயே நின்றதால், சென்னைக்கு 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதற்கிடையே, ரயில் பெட்டிக்கு அடியே தீ எரிந்ததைக் கண்ட பயணிகள் பதறியடித்து ஓடும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்