திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த மகாத்மா காந்தி தெருவைச் சேர்ந்தவர் தண்டபாணி மகன் பழனி (32). இவர் ஓசூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 1 வருடங்களுக்கு முன்னர், ஏழரைபட்டி பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்பவருடன் திருமணமாகி, தற்போது காயத்ரி 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்னர் காயத்ரிக்கு வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது, காயத்ரிக்கு குறைப்பிரசவத்தில் குழந்தை பிறந்து, சில மணி நேரத்திலேயே இறந்துள்ளது. இதன் காரணமாக, பழனி சரியாக சாப்பிடாமல், தூங்காமல் மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.