சென்னை:சென்னை மேற்கு மாம்பலம் கிருஷ்ணப்ப நாயக்கன் தெருவில் வசித்து வந்தவர், மோகன். இவரது மனைவி யமுனா. இவர்களுக்கு சாய் ஸ்வாதி என்ற மகளும் தேஜஸ் என்ற ஐந்து வயது மகனும் உள்ளனர். இதில் சாய் ஸ்வாதி, சைதாப்பேட்டை உள்ள மாநகராட்சி பள்ளியில் ஒன்பதாம் வகுப்பும், மகன் தேஜஸ் நர்சரி பள்ளியில் படித்து வந்தனர்.
யமுனா வீட்டின் அருகே உள்ள பிரிண்டிங் பிரசில் வேலை செய்து வருகிறார். மோகன் இரும்பு பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி பழைய இரும்பு கடையில் மொத்தமாக போட்டு விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இந்தநிலையில் வேலைக்கு சென்று வந்த யமுனாவிற்கு வேறு ஒரு நபருடன் திருமணத்தை தாண்டிய உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் தொழிலாளி மோகன், மனைவியைப் பிரிந்து சில வருடங்கள் தனியாக வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், பலமுறை மோகனை சந்தித்த யமுனா இனிமேல் இது போன்ற தவறுகளை செய்ய மாட்டேன் என உறுதி அளித்துள்ளார். இதனையடுத்து கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.