தமிழ்நாடு

tamil nadu

தாம்பரத்தில் மூன்று நாட்களுக்கு விரைவு ரயில்கள் நிற்காது; தெற்கு ரயில்வே அறிவிப்பு! - முழுவிவரம் இதோ! - trains will not stop at Tambaram

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 11, 2024, 5:12 PM IST

Southern Railway: தாம்பரம் ரயில்வே யார்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு இயக்கப்படும் அனைத்து எக்ஸ்பிரஸ் மற்றும் அதிவிரைவு ரயில்களும் வரும் ஆகஸ்ட் 15,16,17 தேதிகளில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நிற்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில்கள் - கோப்புப்படம்
ரயில்கள் -கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை:சென்னையில்தாம்பரம் ரயில்வே யார்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக தாம்பரம் வழியாக செல்லும் அனைத்து எக்ஸ்பிரஸ் மற்றும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்களும் வரும் 15,16,17 தேதிகளில் தாம்பரத்தில் நிற்காது.

இதற்கு பதிலாக அவை மாம்பலத்தில் கூடுதல் நேரத்துக்கு நிற்கும் எனவும், இந்த 3 நாட்களில் பயணிகள் தாம்பரத்திற்கு பதில் செங்கல்பட்டில் ஏறிக் கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி பின்வரும் ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் நிற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை to தென்மாவட்டங்கள்:

15.8.24 : சென்னை - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், சென்னை - நாகர்கோவில் அதிவிரைவு வண்டி, சென்னை - ராமேஸ்வரம் விரைவு வண்டி, சென்னை - தூத்துக்குடி (முத்துநகர் விரைவு வண்டி), சென்னை - திருநெல்வேலி அதிவிரைவு வண்டி, சென்னை - செங்கோட்டை( பொதிகை அதிவிரைவு வண்டி),

16.8.24 :சென்னை - மதுரை (தேஜஸ் விரைவு வண்டி), சென்னை - ராமேஸ்வரம் விரைவு வண்டி, சென்னை - தூத்துக்குடி, சென்னை - செங்கோட்டை( சிலம்பு விரைவு வண்டி) சென்னை - மதுரை அதிவிரைவு வண்டி (16752),

17.8.24 : சென்னை - மதுரை (தேஜஸ் விரைவு வண்டி), சென்னை - ராமேஸ்வரம் விரைவு வண்டி, சென்னை - தூத்துக்குடி உள்ளிட்ட விரைவு வண்டிகள் தாம்பரத்தில் நிற்காது.

தென் மாவட்டங்கள் toசென்னை :

14.8.24 : திருநெல்வேலி - சென்னை அதிவிரைவு வண்டி, ராமேஸ்வரம் - சென்னை விரைவு வண்டி, தூத்துக்குடி - சென்னை (முத்துநகர் விரைவு வண்டி)

15.8.24 : நாகர்கோவில் - தாம்பரம் அதிவிரைவு வண்டி, செங்கோட்டை - சென்னை ( சிலம்பு விரைவு வண்டி), மதுரை - சென்னை அதிவிரைவு வண்டி (22624), ராமேஸ்வரம் - சென்னை விரைவு வண்டி, தூத்துக்குடி - சென்னை (முத்துநகர் விரைவு வண்டி), மதுரை - சென்னை (தேஜஸ் விரைவு வண்டி)

16.8.24 :நாகர்கோவில் - சென்னை அதிவிரைவு வண்டி, ராமேஸ்வரம் - சென்னை விரைவு வண்டி, தூத்துக்குடி - சென்னை (முத்துநகர் விரைவு வண்டி), மதுரை - சென்னை (தேஜஸ் விரைவு வண்டி) உள்ளிட்ட ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் நிற்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க :மைசூர் - காரைக்குடி இடையே சிறப்பு ரயில்! எப்பத்துல இருந்து தெரியுமா? - Mysore to Karaikudi special train

ABOUT THE AUTHOR

...view details