கோபிசெட்டிபாளையம்: ஈரோடு மாவட்டம் கோபியை சேர்ந்தவர் அருண் ரங்கராஜ் ஜ.பி.எஸ். இவர் கர்நாடக மாநிலம் கல்புர்கி மாவட்டத்தில் உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு (Internal security division) காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி இலக்கியா கர்நாடக மாநில முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு பிரிவு துணை ஆணையராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், கடந்த 2012ம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்த அருண் ரங்கராஜ், கர்நாடக மாநிலத்தில் பணியாற்றிய போது, அதே பிரிவில் சப் இன்ஸ்பெக்டராக இருந்த சுஜாதா என்பவருடன் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவி இலக்கியா கணவரை பிரிந்து சென்று விட்டார்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் அருண் ரங்கராஜ், சப் இன்ஸ்பெக்டர் சுஜாதாவுடன் கோபியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்தார். அங்கு இருவருக்குமிடைய தகராறு ஏற்பட்டு சுஜாதாவுக்கு சராமாரியாக அடி விழுந்துள்ளது. இதில் படுகாயமடைந்த சுஜாதா கோபி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில், வழக்குப்பதிவு செய்து அருண் ரங்கராஜை கைது செய்தனர்.
அதைத்தொடர்ந்து அருண் ரங்கராஜ் தற்காலிக பணி நீக்கமும் செய்யப்பட்டார். இந்நிலையில் கோபியில் உள்ள பெற்றோர் வீட்டில் இருந்த அருண் ரங்கராஜை பார்ப்பதற்காக சுஜாதா கடந்த 3 நாட்களுக்கு முன் கோபி வந்துள்ளார்.