தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனது தாயாரைப் பற்றி அவதூறாக பேசியதாக அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக் குமார் குற்றச்சாட்டு! - Aatral Ashok Kumar - AATRAL ASHOK KUMAR

Erode AIADMK candidate Aatral Ashok Kumar: தனது தாயார் பற்றி அவதூறாக பேசியதாக, ஈரோடு நாடாளுமன்றத் தேர்தல் திமுக வேட்பாளர் பிரகாஷிற்கு, அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் சவால் விடுத்துள்ளார்.

ஈரோடு நாடாளுமன்றத் தேர்தல் திமுக வேட்பாளருக்கு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் சவால்
ஈரோடு நாடாளுமன்றத் தேர்தல் திமுக வேட்பாளருக்கு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் சவால்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 24, 2024, 2:54 PM IST

ஆற்றல் அசோக்குமார்

ஈரோடு: நாடாளுமன்றத் தேர்தல் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி உள்ளது. இதனால், அரசியல் கட்சியினர் தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

கூட்டணிக் கட்சிகள் உறுதி செய்ததைத் தொடர்ந்து, அதிமுகவின் இறுதி கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அதிமுக வேட்பாளர் பட்டியலில், ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக ஆற்றல் அசோக்குமார் பெயர் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார், தனது தாயார் பற்றி அவதூறாக பேசியதாக, திமுக வேட்பாளரிடம், தான் தனது கிராமங்களில் செய்துள்ள திட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்த பிறகு என்னிடம் நேரில் விவாதம் நடத்த தயாரா என சவால் விடுத்துள்ளார்.

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளராக கே.இ.பிரகாஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர், திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில், அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரின் தாயார் சௌந்திரம் எம்பியாக பதவி வகித்தபோது, எந்த ஒரு நலத்திட்டப் பணிகளையும் செயல்படுத்தவில்லை. அதனால் தான் அதிமுக வேட்பாளர், செய்தியாளர்களைச் சந்திக்கும் போது, அவரது தாயாரின் சாதனைகளை குறிப்பிடவில்லை” என்று விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், திமுக வேட்பாளர் பிரகாஷின் இந்த கருத்திற்கு பதிலளிக்கும் விதமாக, அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார், கரூரில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “ எனது தாயாரைப் பற்றி பேசுவதற்கு திமுக வேட்பாளருக்கு எந்த தகுதியும் இல்லை. ஈரோடு பகுதியில் பல்வேறு சாதனை படைத்தவரை இதுபோன்று இழிவுபடுத்தி பேசுவது வேதனை அளிக்கிறது.

தனது தாயாரை பற்றி அவதூறாக பேசும் திமுக வேட்பாளர் பிரகாஷிற்கு, ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் எத்தனை கிராம பஞ்சாயத்து உள்ளது என்று சொல்ல முடியுமா, எத்தனை கிராமங்களுக்கு அவர் சென்றிருக்கிறார்? அங்கு என்ன பிரச்னை உள்ளது என்று கூற முடியுமா?

நான் இதுவரை ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துகளுக்கும் நேரில் சென்று, பல்வேறு திட்டப்பணிகளை செய்துள்ளேன். எனது கிராமங்களில் செய்துள்ள திட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்த பிறகு என்னிடம் நேரில் விவாதம் நடத்த தயாரா? திமுகவினர் அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை கிடைக்கவில்லை, டீசல் விலை குறைக்கவில்லை போன்ற பல்வேறு வாக்குறுதிகளை அவர்கள் முழுமையாக நிறைவேற்றவில்லை” என்றார்.

இதனையடுத்து, ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் வாக்குறுதிகள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், “விரைவில் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்கான தேவையை தலைமையிடம் தெரிவித்து அறிக்கை வெளியிடப்படும். ஈரோடு மக்களுக்கு நான் இதுவரை அரசியல்வாதியாக சேவை செய்யவில்லை. ஒரு சமூக சேவகனாக சேவை செய்துள்ளேன். நம் மக்களுக்காக எந்த இடத்திலும் மண்டியிடத் தயாராக உள்ளேன்.

மேலும், நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டால், மத்தியில் எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும், நமது உரிமைக்காக குரல் கொடுப்பேன். சம்பந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்த அமைச்சர்களைச் சந்தித்து, அழுத்தம் கொடுத்து திட்டங்களைச் செயல்படுத்துவேன். தற்போது உள்ள அமைச்சர் முத்துசாமி அதிமுகவில் இருந்தபோது, அவர் தான் ஈரோட்டின் ஸ்டார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

நாடாளுமன்ற உறுப்பினராக மக்கள் தேர்வு செய்வது நமக்கான திட்டங்களை செயல்படுத்துவதற்காக மட்டும். சுற்றுலாவிற்கு செல்வதைப் போன்று எம்பிக்கள் சென்றால் எந்த திட்டமும் நிறைவேறாது. வருகின்ற 25ஆம் தேதி மதியம் 12 மணி முதல் 1 மணியளவில் வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளதாகவும், எனக்கு ஒரு வாய்ப்பளித்தால் ஈரோடு மக்களுக்கு கண்டிப்பாக நல்லது செய்ய முடியும்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் நான்கு முனைப் போட்டி.. வெற்றி வாய்ப்பு யாருக்கு? - Viluppuram Lok Sabha Constituency

ABOUT THE AUTHOR

...view details