தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிஎம்டிஏ பிஆர்ஓ-க்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் - தேர்தல் ஆணையம்! - lok sabha election campaign - LOK SABHA ELECTION CAMPAIGN

Madras High Court: தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும மக்கள் தொடர்பு அதிகாரி திவாகருக்கு எதிரான புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை
சென்னை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 18, 2024, 4:26 PM IST

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி திவாகருக்கு எதிராக திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் வெயிலுமுத்து என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், “சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி திவாகர், அரசு ஊழியராக இருந்து கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் வட சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அமைச்சர் சேகர் பாபு பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்த பிரச்சாரம் குறித்த செய்தியை, நாடு முழுவதும் உள்ள 188 ஊடகங்களுக்கு தனது அலுவலக மின்னஞ்சல் முகவரியில் இருந்து அனுப்பி உள்ளர். அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறி உள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி சத்யநாராயண பிரசாத் அமர்வில் இன்று (ஏப்.18) விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்பந்தப்பட்ட அந்த அதிகாரிக்கு எதிரான புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க:“கடைசி வாக்காளர் வரை வாக்களிக்க நடவடிக்கை” - தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு! - Lok Sabha Election 2024

ABOUT THE AUTHOR

...view details