தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பாஜக ஆளும் மாநிலங்களில் அதிக நீட் தேர்வு முறைகேடு..கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மலிவான அரசியல்' - துரை வைகோ - NEET UG Paper Leak issue - NEET UG PAPER LEAK ISSUE

Durai Vaiko on NEET UG Paper Leak issue: நீட் தேர்வு விவகாரத்தில் ஏழை எளிய மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, நாடு முழுவதும் அதனைத் தடை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்திய மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அரசியல் பிரமுகர்களும் உதவினர்

துரை வைகோ
துரை வைகோ (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 24, 2024, 9:56 AM IST

பெரம்பலூர்: மதிமுக கட்சி நிர்வாகி ஜெயசீலன் என்பவரின் மகளின் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ பெரம்பலூருக்கு வந்திருந்த நிலையில், செய்தியாளர்களையும் சந்தித்து பேசினார்.

கள்ளக்குறிச்சி விவகாரம்; மலிவான அரசியல் வேண்டாம்:அப்போது பேசிய துரை வைகோ, "கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் உயிரிழந்தவர்களுக்கும் மற்றும் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் தமிழக அரசும், காவல்துறையினரும் மற்றும் மாவட்ட நிர்வாகமும் இனைந்து போதிய உதவிகளை செய்து வருகின்றனர். ஆனால், அரசியல் ஆதாயம் தேடுவதற்காக சிபிஐ விசாரணை வேண்டும் என்ற சர்ச்சைக்குரிய விஷயங்களையும் தேவையற்ற கருத்துக்களையும் சொல்வது மலிவான அரசியல். மேலும், சிபிசிஐடி விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

துரை வைகோ செய்தியாளர்கள் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

இதுமட்டும் அல்லாது, முன்னாள் நீதிபதி கோகுல்தாஸை கொண்டு தனி நபர் ஆணையம் உருவாக்கப்பட்டு விசாரணையை துவங்கியுள்ளது. தவறு செய்த அதிகாரிகளுக்கு தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கள்ளச்சாராயம் விற்பனை செய்த குற்றவாளி அவருக்கு உதவியாக இருந்தவர்கள் என அனைவரையும் தமிழக அரசு கைது செய்துள்ளது.

இது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள முதல் சம்பவமோ அல்லது ஒற்றை சம்பவமோ கிடையாது. கடந்த ஆண்டும் இது போன்ற ஒரு சம்பவம் நடைபெற்றது. தொடர்ச்சியாக, கடந்த 30 ஆண்டுகளாக இதுபோன்ற கள்ளச்சாராய சாவுகள் தொடர்கதையாகி வருகிறது.

அரசியல் பிரமுகர்களும் உதவி செய்துள்ளனர் - துரை வைகோ: இது மட்டுமின்றி இதேபோல, வடமாநிலங்களான குஜராத், பீகார் உள்ளிட்ட பூரண மதுவிலக்கு அமலில் உள்ள மாநிலங்களிலும் நாட்டையே உலுக்கிய கள்ளச்சாராயம் சாவுகள் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி, ஏற்கனவே இதேபோல கள்ளச்சாராய வழக்கில் சிறை சென்று மீண்டு வந்தவர். அவருக்கு உரிய தண்டனை வழங்கப்படவில்லை. அவருக்கு பல்வேறு அதிகாரிகளும் அரசியல் பிரமுகர்களும் உதவி செய்துள்ளார்கள். அவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

நீட் தேர்வை ஆதரிப்பது பாஜக மட்டுமே:மேலும் தொடர்ச்சியாக பேசிய அவர், "நீட் தேர்வுக்கு (NEET Exam) எதிராக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பாஜகவை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் நீட்டிற்கு எதிராக குரல் கொடுப்பதோடு போராட்டங்களையும் நடத்தி இருக்கிறோம். ஆனால், நீட் தேர்விற்கு சாதகமாக செயல்படக்கூடிய ஒரே ஒரு கட்சி பாஜக தான்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீடு 7.5 சதவீதத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது பாஜக. நீட் தேர்வில் வினாத்தாள் லீக் ஆன விவகாரம்(NEET UG Paper Leaked Issue), கருணை மதிப்பெண் கொடுத்த விவகாரம் என எல்லாமே பாஜக ஆளும் மாநிலங்களில் தான் மிக அதிகமாக உள்ளது. அது தொடர்பாக, நீட் தேர்வு நடத்தக்கூடிய மத்திய அரசு அதிகாரியே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியா முழுவதும் நீட் தேர்வுக்கு தடை விதிக்கவும்:நீட் தேர்வு தகுதி என்பதே தேவையில்லை. ஏற்கனவே, பன்னிரண்டாம் வகுப்பில் மாணவர்கள் மிகவும் கஷ்டப்பட்டுத்தான் படிக்கிறார்கள். அதன் பிறகு, எதற்கு மருத்துவராவதற்கு வேறு ஒரு தேர்வு வைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். இந்த நீட் தேர்வு பயிற்சிக்காக ஏழை எளிய மாணவர்கள் செலவு செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள். நீட் தேர்வு என்பது ஏழை எளிய மாணவர்களுக்கு எதிரான ஒரு தேர்வு. அதனை தமிழ்நாடு மட்டும் இன்றி இந்தியா முழுவதும் தடை விதிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க:முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு; "ஆயிரக்கணக்கான டாக்டர்கள் நம்பிக்கை இழப்பு" - மு.க.ஸ்டாலின் கண்டனம்!

ABOUT THE AUTHOR

...view details