சென்னை:சென்னை எழும்பூரில் உள்ள இராஜரத்தினம் மைதானம் அருகே திமுக சட்டthதுறை சார்பில் புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. இந்த உண்ணாவிரதப் போரட்டம் திமுக சட்டத்துறை செயலாளரும், எம்பியுமான என்.ஆர்.இளங்கோ தலைமையில் நடைபெற்றது.
துரைமுருகன் பேச்சு (CREDITS- ETV Bharat Tamil Nadu) மேலும், இந்த போரட்டத்தை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தொடக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். அதில் பேசிய துரைமுருகன், “பாஜக அரசு 3 சட்டங்களுக்கும் பெயர் சூட்டுவிழா நடத்தியுள்ளனர். பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷிய அதினியம் என்ற இந்த வார்த்தைகள் எல்லாம் வாயில் நுழையக்கூட இல்லை.
இந்த அவஸ்தைக்குதான் நாங்கள் ஆரம்பத்திலிருந்து இந்தியை எதிர்க்கிறோம். இவ்வாறு பெயர் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக தமிழக நீதிமன்றங்களில் இந்தியை உச்சரிக்க வேண்டும் என்றுதான் பாஜக இதை செய்துள்ளது. அதிகாரத்தில் இருக்கும் யாரும் தங்களை கேள்வி கேட்கக்கூடாது என பாஜக நினைக்கிறது. அதனால்தான் பெயர் மாற்றம் கூட எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்து நிறைவேற்றியுள்ளனர்.
இந்த சட்ட திருத்தங்களுக்கு நியாயமாக பார்த்தால் எதிர்ப்பு கருத்து கூறியிருக்க வேண்டியவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி. உச்ச நீதிமன்றம் இந்நேரம் இந்த சட்டத்திருத்தங்களை குப்பைத் தொட்டியில் வீசி இருக்க வேண்டும். இந்தியை கட்டாயப்படுத்தி மாநிலங்களுக்குள் சர்வாதிகாரத்தோடு திணிப்பது தான், இந்த 3 சட்டங்களின் நோக்கம். ஆரம்பத்திலேயே பாஜகவின் இந்தி திணிப்பு உத்தியை கிள்ளி எறிய திமுக சட்டக்குழு இந்த போராட்டத்தை கையில் எடுத்துள்ளது” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க:ஆம்ஸ்ட்ராங் படுகொலை: ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள், பிஎஸ்பி தொண்டர்கள் சென்னையில் போராட்டம்.. போக்குவரத்து பாதிப்பு