தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லையா? - இந்த வாய்ப்பை தவறவிட வேண்டாம்! - Instructions of birth certificate - INSTRUCTIONS OF BIRTH CERTIFICATE

Name in Birth Certificate: குழந்தை பிறந்து 15 ஆண்டுகளாக பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்காதவர்கள் வரும் டிசம்பர் மாதம் 31ஆம் தேதிக்குள் பெயரை சேர்க்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம்
பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 5, 2024, 3:53 PM IST

Updated : Aug 5, 2024, 6:41 PM IST

சென்னை: குழந்தை பிறந்து 15 ஆண்டுகளில் பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க வேண்டும். அவ்வாறு பிறப்பு சான்றிதழில் 15 ஆண்டுகளாக பெயர் சேர்க்காதவர்கள் வரும் டிசம்பர் மாதம் 31ஆம் தேதிக்குள் பெயர் சேர்த்துக்கொள்ள வேண்டுமென பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட வருவாய் மற்றும் சுகாதார இணை மற்றும் துணை இயக்குநர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "பள்ளி மாணவர்களின் பிறப்புச் சான்றிதழில் பெயர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 2023 அக்டோபர் 1ஆம் தேதி முதல் பிறப்பு சான்றிதழ் பெயர் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களின் பிறப்புச் சான்றிதழில் பெயர் விடுபட்டிருந்தால் அது குறித்து பெற்றோர்களுக்கு தெரிவித்து சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதன் முன்னேற்ற அறிக்கை குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்திற்கும் தெரிவிக்க வேண்டும்.

இதுமட்டும் அல்லாது, பெற்றோர் மற்றும் பாதுகாப்பாளரின் கையொப்பமிட்ட படிவம் பெற்று பெயர் சேர்க்கலாம். பிறப்பு சான்றிதழ் குறித்து எதிர்காலத்தில் மாணவர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இந்த ஆண்டுக்குள் பெயர் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மாணவரின் முழு பெயரை சேர்க்கலாம் அல்லது பெயரில் சில எழுத்துக்கள் திருத்தம் வேண்டும் என்றால், அந்த பெயர் திருத்தத்தையும் செய்து கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளார்.

பிறப்புச் சான்றிதழ்: இந்தியாவின் உரிமையியல் பதிவு முறையின் (CRS) கீழ், பிறப்புகளை பதிவு செய்வது கட்டாயமாகும். பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம், 1969-ன் படி நாடு முழுவதும் பிறப்பு, இறப்பு மற்றும் குழந்தை பிறக்கும்போதே இறந்து பிறத்தல் ஆகியவற்றை பதிவு செய்வதை கட்டாயமாக்குகிறது.

பிறப்புச் சான்றிதழை வழங்குபவர் யார்: சான்றிதழை வழங்கும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பில் பிறப்பு பதிவு செய்யப்பட வேண்டும். அந்தவகையில், நகர்ப்புறங்களில் முனிசிபல் கார்ப்பரேஷன் அல்லது முனிசிபல் கவுன்சில் பிறப்புச் சான்றிதழை வழங்குகிறது. கிராமப்புறங்களில் வட்டாட்சியர் அல்லது கிராம பஞ்சாயத்து அலுவலகம் மூலம் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிப்பதற்கான படிநிலைகள்:

  • பிறப்புச் சான்றிதழ் பதிவுப் படிவத்தை crsorgi.gov.in என்ற இனைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்தும் அல்லது பதிவாளர் அலுவலகத்தில் இருந்தும் பெறலாம். மேலும், மருத்துவமனையில் குழந்தை பிறந்தால், அதற்கான படிவம் மருத்துவ அலுவலராலேயே வழங்கப்படுகிறது.
  • குழந்தை பிறந்த 14 நாள்களுக்குள் ஒவ்வொரு பிறப்பும் பதிவு செய்யப்பட வேண்டும்.
  • பிறப்புச் சான்றிதழ் விண்ணப்பித்தபிறகு தேதி, நேரம், பிறந்த இடம், பெற்றோரின் அடையாளச் சான்று போன்றவை சரிபார்த்தவுடன் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

பிறப்புச் சான்றிதழ் பெறத்தேனையான ஆவணங்கள்: பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ்கள், பெற்றோரின் திருமணச் சான்றிதழ், மருத்துவமனையில் இருந்து குழந்தை பிறந்தது குறித்து வழங்கப்பட்ட கடிதத்தின் சான்று, பெற்றோரின் அடையாளச் சான்று போன்றவை பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்கு தேவையான முக்கியமான ஆவணங்கள் ஆகும்.

தாமதமான பிறப்புச் சான்றிதழுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது:

  • 14 நாள்களுக்குள் ஒவ்வொரு பிறப்பும் பதிவு செய்யப்பட வேண்டும். இருப்பினும், சில காரணங்களால், பெற்றோர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் குழந்தையின் பிறப்பை பதிவு செய்யத் தவறி, ஒரு மாதத்திற்குள் பதிவு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டத்தின் பிரிவு 13ன் கீழ் பரிந்துரைக்கப்பட்ட தாமதமான பதிவு விதிகளின் கீழ் தாமதக் கட்டணத்தைச் செலுத்தி பிறப்புச் சான்றிதழ் பெறலாம்.
  • ஒரு மாதத்திற்கு மேல் அல்லது ஒரு வருடத்திற்குள்ளாக பிறப்புச் சான்றிதழ் பெற வேண்டும் என்றால், சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் எழுத்துப்பூர்வமா அனுமதியுடன் மற்றும் தாமதக் கட்டணம் செலுத்தி பிறப்பு பதிவு செய்யப்படுகிறது. அத்தோடு, பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
  • இவையெல்லாம் தவிர்த்து ஒரு வருடத்திற்கு மேலானால், பிறந்த தேதி சரிபார்க்கப்பட்ட பிறகு நீதிமன்றத்தால் மட்டுமே பிறப்பு பதிவு செய்ய இயலும்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்.. அதிர்ச்சியில் உறைந்த பக்தர்கள்!

Last Updated : Aug 5, 2024, 6:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details