சென்னை:தமிழக பாஜகவின் முன்னால் மாநிலத் தலைவர் நாராயணராவ்வின் மனைவி வசந்தரா தேவி கடந்த ஞாயிற்றுக்கிழமை வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் தொண்டர்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.
இதனையடுத்து அண்ணாமலை கூறும்போது, "என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்காகப் பிரதமர் மோடியிடம் நேரத்தைக் கேட்டிருக்கிறோம் அதற்கான முடிவுகள் தெரிவிக்கப்படும். அனைத்து மக்களையும் ஒன்றாக இணைத்து நேர்மையான முறையில் ராமர் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. இதில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என அனைவரும் பணம் கொடுத்துள்ளார்கள்.
வேங்கை வயல் பிரச்சனையில் மாநில அரசு தவறான முறையில் விசாரணை மேற்கொள்கிறது. யாரோ ஒரு ஐந்து பேரை அழைத்து வந்து அவரின் டிஎன்ஏ எடுத்து சோதனை செய்தால் எப்படி ஒத்துப் போகும் என கேள்வி எழுப்பிய அண்ணாமலை. தொடர்ந்து பேசுகையில், திமுக எம்எல்ஏ மகன் வீட்டில் பணிக்குச் சென்ற பெண்ணிற்கு 16 ஆயிரம் சம்பளம் என கூறிவிட்டு 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள் என பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.
மேலும், மேசமான உணவு வழங்கப்பட்டதாகவும் அடித்துத் துன்புறுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியிருக்கிறார். அவர்கள் மீது வன்கொடுமை சட்டம், குழந்தைகள் பாதுகாப்பு சட்டம், ஆபாசமாகப் பேசுவது, தாக்கியது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட ஐந்து பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.