தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தல்: சைக்கிளில் வந்த திமுக மேயர் வேட்பாளர்.. போட்டிக்கு களமிறங்கிய பவுல்ராஜ்! - Tirunelveli Mayor Election - TIRUNELVELI MAYOR ELECTION

Tirunelveli Mayor Election: திருநெல்வேலி மாநகராட்சியின் புதிய மேயரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இதில், திமுக தலைமை அறிவித்துள்ள ராமகிருஷ்ணன் சைக்கிளில் வந்து வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

வேட்பாளர் ராமகிருஷ்ணன்
வேட்பாளர் ராமகிருஷ்ணன் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 5, 2024, 12:51 PM IST

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி மேயராக இருந்த சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து மாநகராட்சியின் புதிய மேயரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் படி நடைபெறும் இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக சார்பில் 25வது வார்டு உறுப்பினர் ராமகிருஷ்ணன் (எ) கிட்டு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தல் (Credits - ETV Bharat Tamil Nadu)

காலை 10 மணிக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கும் என தேர்தல் நடத்தும் அலுவலரான மாநகராட்சி ஆணையர் சுகபுத்திரா அறிவித்திருந்தார். நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளில் 51 வார்டுகள் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே கைவசம் வைத்துள்ளன.அதில் யார் அதிக வாக்கு பெறுகிறார்களோ அவர்கள் வெற்றி பெறுவார்கள். இதையடுத்து தற்போது கவுன்சிலர்கள் இந்த தேர்தலுக்கு வரத் தொடங்கி உள்ளனர்.

ஏற்கனவே திமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில், மற்றொரு திமுக கவுன்சிலரான பவுல்ராஜ் கையில் வேட்பு மனுவுடன் தேர்தல் நடைபெறும் அரங்கிற்கு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இவர் ஏற்கனவே தொடர்ச்சியாக ஆளுங்கட்சி மேயருக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக, சமீபத்தில் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டார்.

சுயேட்சையாக களமிறங்கிய பவுல்ராஜ்:திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட மேயர் வேட்பாளருக்கு எதிராக பவுல்ராஜ் போட்டி வேட்பாளராக களம் இறங்கும் நோக்கில் கையில் மனுவுடன் சென்றுள்ளார். அதேசமயம் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால், சுயேட்சையாகவே களமிறங்க முடிவு செய்துள்ளார்.. இதற்கிடையில் மேயர் வேட்பாளர் ராமகிருஷ்ணன் சக திமுக கவுன்சிலர்கள் படை சூழ, சைக்கிளில் மாநகராட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தார்.

இவர் அனைத்து இடங்களுக்கும் சைக்கிள் தான் செல்வார் என்றும், இவருக்கு சொந்தமாக கார், பைக் கூட கிடையாது என்றும் மக்கள் கூறுகின்றனர். தொடர்ந்து மறைமுக தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கடும் கட்டுப்பாடு தேர்தல் நடைபெறும் அரங்கிற்குள் செல்ல கவுன்சிலர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை அதிகாரிகள் விதித்துள்ளனர்.

அதன் படி கவுன்சிலர் அனைவரும் கடும் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே கவுன்சிலர்களின் செல்போன் நுழைவு வாசலிலேயே வாங்கி வைக்கப்படுகிறது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:கவுன்சிலர் டூ மேயர் வேட்பாளர்; நெல்லையை சைக்கிளில் வலம் வரும் ராமகிருஷ்ணனின் பின்னணி என்ன? - NELLAI MAYOR CANDIDATE RAMAKRISHNAN

ABOUT THE AUTHOR

...view details