தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. சென்னை மருத்துவமனையில் அனுமதி! - Durai Murugan dmk - DURAI MURUGAN DMK

durai murugan health: நீர்வளத்துறை அமைச்சரும், தி.மு.க. பொதுச்செயலாளருமான துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துரைமுருகன் (கோப்புப் படம்)
துரைமுருகன் (கோப்புப் படம்) (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 13, 2024, 2:22 PM IST

சென்னை:நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து வரும் நிலையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

ஏறக்குறைய திமுக அங்கு வெற்றி பெறும் நிலையில் இருப்பதால், சென்னை அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். முன்னதாக, திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் அறிவாலயத்துக்கு வருகை புரிந்தார். இந்த நிலையில் அமைச்சர் துரைமுருகன் முதல்வரை சந்தித்து வாழ்த்து சொல்ல அறிவாலயத்துக்கு வந்தார்.

அப்போது, அவருக்கு திடீரென உடல்நல கோளாறு ஏற்பட்டுள்ளது. உடனே எம்எல்ஏ-வும், மருத்துவருமான எழிலன் அமைச்சர் துரைமுருகனுக்கு முதலுதவி செய்தார். அதன் பின்னர் துரைமுருகனை சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். முதற்கட்ட தகவலின்படி, ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்ததால் துரைமுருகன் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க:15 ஆசிரியர்களுடன் லீவு போட்டு வெளியே போன எச்.எம்.. கல்வித்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!

ABOUT THE AUTHOR

...view details