தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடி இரட்டை கொலை வழக்கு; 3 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு - Thoothukudi murder case

Thoothukudi double murder case: தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய 3 குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மற்றும் இருவருக்கு தலா ரூ.20,000, ஒருவருக்கு ரூ.26,000 அபராதம் என தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் - II தீர்ப்பு வழங்கியுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம்
தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 5, 2024, 7:29 AM IST

தூத்துக்குடி:கடந்த 02.07.2020 அன்று தூத்துக்குடி மாவட்டம், ஏரல் சிவகளை பகுதியைச் சேர்ந்தவர்களான கசமுத்து மகன் அருண்மகேஷ்(26) மற்றும் லட்சுமணன் மனைவி முத்துபேச்சி (42) ஆகிய இருவரையும் குடும்ப பிரச்சனை காரணமாக கொலை செய்த வழக்கில் கொலை செய்யப்பட்ட முத்துபேச்சியின் உறவினரான ஏரல் முதலியார் தெருவைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் முத்துராமலிங்கம்(27) மற்றும் அவரது நண்பர்களான சிவகளை பொட்டல் பகுதியைச் சேர்ந்தவர்களான சுந்தரம் மகன் முத்துசுந்தர்(24), அய்யாபிள்ளை மகன் அருணாச்சலம் (41) ஆகியோரை ஏரல் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

இவ்வழக்கை அப்போதைய ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் சொர்ணராணி, புலன் விசாரணை செய்து கடந்த 16.09.2020 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார். இவ்வழக்கின் விசாரணை, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் - IIல் நடைபெற்று வந்தது.

இவ்வழக்கை (புதன்கிழமை) விசாரித்த நீதிபதி உதயவேலன் குற்றவாளி முத்துராமலிங்கம் என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.26,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அதேபோல, குற்றவாளிகள் அருணாச்சலம், முத்துசுந்தர் ஆகிய இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இது தொடர்பான வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் சொர்ணராணி மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் சேவியர் ஞானப்பிரகாசம் மற்றும் விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை காவலர் அரவிந்த் ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோ.பாலாஜி சரவணன் பாராட்டினார்.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் ஒரே இரவில் 7 இடங்களில் செல்போன் பறிப்பு; அச்சத்தில் மக்கள்.. போலீசார் ஆக்‌ஷன் என்ன? - thoothukudi cell phone snatch

ABOUT THE AUTHOR

...view details