திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், காவலர் வீரவணக்க தினத்தையொட்டி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களின் தியாகங்கள் மற்றும் அவர்களது செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான துப்பாக்கிக் கண்காட்சி மற்றும் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த கண்காட்சியில் பாயிண்ட் 22 ரக துப்பாக்கிகள், எஸ்எல்ஆர் ரக துப்பாக்கிகள், செல்ஃப் லோடிங் ரைபிள், கிளாஸ் 17 மற்றும் 19 ரக துப்பாக்கிகள் என பல்வேறு ரக துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள், வெடிகுண்டு தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட பொருட்கள் உள்ளிட்டவைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்ற காட்சிகள் (Credit - ETV Bharat Tamil Nadu) இதனை மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் நேரில் பார்வையிட்டனர். தொடர்ந்து காவலர்கள் துப்பாக்கிகள் தொடர்பாகவும், வெடி பொருட்கள் தொடர்பாகவும் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.
இதையும் படிங்க :உட்காந்துட்டன்ல.. மதுபோதையில் பஸ் டிரைவர் மடியில் அமர்ந்து அட்ராசிட்டி செய்த நபர் கைது!
பின்னர் கமாண்டோ பயிற்சி பெற்ற வீரர்களைக் கொண்டு பயங்கரவாத தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. அந்த ஒத்திகை நிகழ்ச்சியில் பயங்கரவாதிகளால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட (hijack) கட்டடத்தை போலீசார் மற்றும் கமாண்டோ படை வீரர்கள் எவ்வாறு மீட்கின்றனர் என்பது தொடர்பான காட்சிகள் மாணவர்கள் மத்தியில் செய்து காட்டப்பட்டன.
மேலும், பயங்கரவாத கட்டுப்பாட்டில் உள்ள கட்டடங்களிலிருந்து எவ்வாறு தப்பிப்பது என்பது குறித்தும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. அந்த செயல் விளக்கத்தின் போது, நான்கு பயங்கரவாதிகள் மூலம் கைப்பற்றப்பட்ட கட்டடத்தை கமாண்டோ பயிற்சி பெற்ற ஆறு காவலர்கள் ரகசிய தகவல் கிடைத்து அங்கு சென்று துப்பாக்கி முனையில் கட்டடத்தை மீட்கும் காட்சிகளும் தத்ரூபமாக அமைக்கப்பட்டன. இந்த காட்சிகளை கண்டு அங்கு வந்த மாணவர்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.
தொடர்ந்து வெடிகுண்டு பார்சல் உள்ளிட்டவைகளை மாவட்ட மோப்பநாய் பிரிவு, மோப்பநாய் ஜாக் கண்டறிந்து காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கும் செயல் விளக்கமும், கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகள் எவ்வாறு செயலிழப்பு செய்யப்படுகிறது என்பது குறித்த விளக்கமும் மாணவர்கள் மத்தியில் தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டன.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்